எம்ஜிஆரிடம் வாங்கிய கடன்!.. திருப்பிக் கொடுக்க நினைத்த மாஸ்டர்.. விட்டாரு பாருங்க ரைடு!.. சுவாரஸ்யமான சம்பவம்..
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் இன்றளவும் ஒரு தெய்வமாக கொண்டாடப்படுகிற ஒரு நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் செய்த அரும்பணிகள், தொண்டுகள் என மக்களை ஒரு கடவுளாகவே பார்க்க வைத்திருக்கிறது. சினிமாவில் இருக்கும் போதும் சரி அரசியலில் இருக்கும் போதும் சரி அவரின் எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் என எதையுமே மாற்றிக் கொள்ளாதவராகவே இருந்தார்.
அதனாலேயே எம்ஜிஆரை தங்கள் தலைவராக தங்களில் ஒருவராக மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில்
எம்ஜிஆருக்கு கிட்டத்தட்ட 19 படங்களில் எம்ஜிஆருக்காக டூப் போட்டு நடித்த மாஸ்டர் சாகுல் எம்ஜிஆர் தனக்கு செய்த உதவியை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : முதல் நாளே ஃபைட் சீன் வைத்த இயக்குனர்… அஜித்தை இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் படுக்க வைத்த பகீர் சம்பவம்…
சாகுல் சினிமாவிற்குள் வந்த பொழுது ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் டூப் போட்டு நடித்துக் கொண்டிருந்தாராம். அதன் பின் எம்ஜிஆரின் படத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். வந்த சில நேரங்களிலேயே அவரைப் பற்றி எம்ஜிஆர் தீவிர விசாரனை நடத்தி இனிமேல் நீ தான் என் படத்திற்கு எனக்கு டூப் போட வேண்டும் என சொல்லிவிட்டாராம்.
அதிலிருந்து 19 படங்களுக்கு எம்ஜிஆருக்காக டூப் போட்டு நடித்தார். ஒரு சமயம் ஒரு நிலம் வாங்கும் பிரச்சினையில் சாகுல் 3000 ரூபாய் மட்டும் அட்வான்ஸ் கொடுத்து அந்த நிலத்தை வாங்கியிருக்கிறார். 10000ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்திற்கு 3000 ரூபாய் மட்டும் கொடுத்திருந்த நிலையில் மீதம் 7000 ரூபாயை நிலத்தின் சொந்தக்காரன் கேட்கத் தொடங்கிவிட்டாராம்.
ஆனால் சாகுல் பல படங்களில் கமிட் ஆகியிருந்த நிலையில் அங்கு போய் கேட்க சண்டைக் காட்சிகள் வரும் போது சொல்றேன், அப்பொழுது நடித்துக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள் என்று கூறிவிட்டனராம். அதன் பின் எம்ஜிஆருக்கு உதவியாளராக இருந்த சபாபதி என்பவர் அறிவுரை படி எம்ஜிஆரிடம் வந்து கேட்டிருக்கிறார்.
எம்ஜிஆரும் பணத்தை எடுத்து வரச்சொல்லி தன்னிடம் இருந்த 100 ரூபாய் கட்டில் சில தாள்களை கிள்ளி எடுத்து எண்ணாமல்யே கொடுத்தாராம். ஆனால் வெளியே வந்த பிறகு அதில் 5800 ரூபாய் தான் இருந்திருக்கிறது. இருந்தாலும் மீதமுள்ள பணத்திற்கு தன்னிடம் இருந்த நகையை அடமானம் வைத்து அதில் வந்த ரூபாய், எம்ஜிஆர் கொடுத்த ரூபாய் என அனைத்தையும் கொடுத்து நிலத்தை வாங்கிவிட்டாராம்.
அதன் பின் சில நாள்கள கழித்து படங்களில் டூப் போட்டு நடித்ததில் வந்த தொகையை எடுத்துக் கொண்டு போய் எம்ஜிஆரிடம் வாங்கிய கடனை கொடுக்க எம்ஜிஆரை சந்தித்திருக்கிறார் சாகுல். எம்ஜிஆர் என்ன என கேட்க சாகுல் விவரத்தை சொல்ல கோபமாக முறைத்துக் கொண்டு ‘உனக்கு ரெண்டு மகள்கள் இருக்கிறார்கள் அல்லவா? இந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்கு தேவையான நகையை வாங்கு முதலில், அதை விட்டுவிட்டு பணத்தை திருப்பி தர வந்திருக்கிறானாம், ஓடிரு’ என்று கோபமாக கத்த சாகுல் படக்கென்று எம்ஜிஆரின் காலில் விழுந்து வணங்கி வந்து விட்டாராம்.