Cinema History
படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி.. முதல் ஆளாக ஓடிய எம்.ஜி.ஆர்.. கண்ணீர் விட்ட முத்துராமன்…
எம்ஜிஆர், ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோர் நடிப்பில், நீலகண்டன் இயக்கத்தில், எம். எஸ்.விஸ்வநாதன் இசையில் கடந்த 1971ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு தாய் மக்கள்’. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு சம்பவத்தால், நடிகர் முத்துராமன் எம்ஜிஆரை நினைத்து கண் கலங்கினாராம்.
இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சிக்காக, நடிகர் முத்துராமன், ஜெயலலிதாவின் கையை பிடித்துக்கொண்டு ஒரு குன்றின் மீது நிற்கவேண்டும், எதிரில் இருக்கும் மற்றொறு குன்றின் மீது எம்ஜிஆர் கையில் பெரிய துப்பாக்கியோடு நின்றிருப்பார். எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தவறுதலாக குண்டு பாய்ந்துவிட்டது.
அந்த குண்டு, நடிகர் முத்துராமின் காலில் பட்டுவிட்டது. உடனே அம்மா என்று கத்தி கீழே மடிந்து உட்கார்ந்துவிட்டார் முத்துராமன். இதனை பார்த்த நொடியே அந்த குன்றின் மீதிருந்த எம்ஜிஆர், மற்றொரு பக்கம் இருந்த படக்குழுவினர், இயக்குநர் அனைவரும் ஓடி வந்துள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் வருவதற்கு முன்பாகவே முதல் ஆளாக ஓடி வந்து முத்துராமனுக்கு உதவினார் எம்.ஜி.ஆர். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய படப்பிடிப்பையே பாதியில் நிறுத்திவிட்டார்.
மருத்துவமனையிலும் தேவையான அனைத்து வசதிகளையும் எம்.ஜி.ஆர் செய்துகொடுத்துள்ளார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஓடி வந்து தன்னை தூக்கி சென்று உதவிய எம்ஜிஆரின் செயலை நினைத்து கண் கலங்கியுள்ளார் நடிகர் முத்துராமன். அந்த குன்றின் மீதிருந்து எப்படி அத்தனை விரைவாக எம்ஜிஆர் ஓடி வந்தார் என்று படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க- விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க வேண்டாம்- கண்டிஷன் போட்ட அஜித்! ஓ இது தான் பிரச்சனையா!!