எம்.ஜி.ஆரை மரியாதை இல்லாமல் பேசிய பிரபல இயக்குனர்!..ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?.. நடந்தத பாருங்க!..
எம்.ஜி.ஆரை ரசிகர்களின் முன் மரியாதை இல்லாமல் பேசிய இயக்குனரின் நிலை என்ன ஆனது என்பதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது கூறினார். அவர் கூறியது பின்வருமாறு: எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான ‘அலிபாவும் 40 திருடர்களும் ’ படத்தை தொடர்ந்து அதே ஆண்டில் தமிழ் புத்தாண்டின் போது வெளியான மற்றுமொரு படம் ‘மதுரை வீரன்’. இந்த படத்திலும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பானுமதியும் நடித்தார்.
கூடவே நடிகை பத்மினி இன்னொரு கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர் புகழின் உச்சியை தொட்டிருந்தார். ஏகப்பட்ட ரசிகர்களுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் மக்கள் மனதில். மதுரை வீரன் படத்தை இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். இவர் எம்.ஜி.ஆரின் வளர்ச்சியை அணு அணுவாக ரசித்தவர். மேலும் எம்.ஜி.ஆரின் வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார் டி.ஆர்.ரகுநாத்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் இல்லாமல் எடுக்கப்பட்ட டூயட் காட்சி!..கோபத்தின் உச்சிக்கே சென்ற பொன்மனச்செம்மல்!..
ஆனால் இந்த மதுரை வீரன் படத்தில் இருந்து டி.ஆர்.ரகுநாத் விலக ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரே காரணமாக இருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. என்ன நடந்தது என்றால் எம்.ஜி.ஆரை டி.ஆர்.ரகுநாத் எப்பவுமே என்ன ராமச்சந்திரா, வா, போ, சில சமயம் டா போட்டு கூட பேசுவாராம்.
ஒரு சமயம் எம்.ஜி.ஆரை பார்க்க அவர்கள் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.ரகுநாத் எம்.ஜி.ஆரை தான் சொன்ன இடத்தில் வந்து நிக்க சொன்னாராம். வந்து நின்ன எம்.ஜி.ஆர் டி.ஆர்.ரகுநாத் சொன்ன இடத்திலிருந்து சற்று கொஞ்சம் முன்னே வந்து நின்னாராம். இதை பார்த்த டி.ஆர்.ரகுநாத் ‘ராமச்சந்திரா, நான் சொன்ன இடத்தில் நிற்காமாட்டீயா’ என ரசிகர்கள் முன் சத்தம் போட அதை கேட்ட ரசிகர்கள் ஒரே ஆரவாரம் செய்தனராம்.
அதன் பின் டி.ஆர்.ரகுநாத்தை தனியே அழைத்து எம்.ஜி.ஆர் ‘என்னை தனி இடத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம், என்னவேண்டுமானாலும் சொல்லலாம், என் ரசிகர்களின் பலம் யாவரும் அறிந்ததே. ஆதனால் இனி ரசிகர்கள் முன் மட்டும் அப்படி பேச வேண்டாம்’ என சொல்ல டி.ஆர்.ரகுநாத்தும் அதை ஏற்றுக் கொண்டாராம். மறு நாள் படப்பிடிப்பிற்கு வந்த டி.ஆர்.ரகுநாத் அதே முறையில் தான் எம்.ஜி.ஆரை அழைத்திருக்கிறார். அதனால் எம்.ஜி.ஆரிடம் ‘பழக்க தோஷம் விட மாட்டிக்குது, மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆதலால் இனி இந்த படத்தை நான் தொடருவதாக இல்லை, என் உதவியாளர் இந்த படத்தை இயக்குவார்’ என யோகானாந்தை மதுரை வீரன் படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் டி.ஆர்.ரகுநாத்.