தமிழ் சினிமாவில் என்னதால் போட்டி, பொறாமைகள் இருந்தாலும் அவர்களுக்கு பின்னாடி ஒரு நட்பு இருந்து கொண்டே தான் இருந்தது அந்த கால சினிமா வாழ்க்கையில். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் பாதியளவு கூட இன்றைய தலைமுறைகள் பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்கள் வழியில் நடிகர் சோ மற்றும் கவிஞர் கண்ணதாசன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சோ சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களிடம் நெருங்கி பழக கூடிய நபராகவும் இருந்துள்ளார். எந்த அளவுக்கு நெருங்கி பழகினாலும் அவர் பத்திரிக்கையாளர் என்பதால் விமர்சிக்கவும் யோசிக்க மாட்டார்.
அந்த வகையில் கவிஞர் கண்ணதாசன் ஒரு சமயன் கருணாநிதியை வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நிகரான ஒரு ராஜதந்திரி என்று குறிப்பிட்டிருந்தார். இதை மறுநாள் தன் பத்திரிக்கையில் கண்ணதாசனை விமர்சித்து கடுமையாக சாடியிருந்தார் நடிகர் சோ. சிறிது நாள்கள் கழித்து கண்ணதாசன் சோவுக்கு தொலைபேசியில் அழைத்து இன்றைய நாள் முக்கியமான நாள். இதை கேட்டு அதன் பிறகு தான் கலைஞர் யாரென்று உங்களுக்கு தெரியும். மேலும் அவர் சரியான ராஜதந்திரி என்றே நீங்களே சொல்வீர்கள் என்று சோவிடம் கூறியிருக்கிறார் கண்ணதாசன்.
இதையும் படிங்கள் : ஒரு நாளைக்கு 170 சிகரெட் பிடித்தேன்… வாரணம் ஆயிரம் படம் என்னை மாற்றியது… சீக்ரெட் பகிர்ந்த வெற்றிமாறன்
அதாவது 1972ல் அக்டோபர் மாதம் திராவிட கழகத்திடம் கணக்கு கேட்டதாக எம்.ஜி.ஆரை கழக பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் கலைஞர் நீக்க போகிறார் என்று தீர்மானம் போடும் நாள் அது. அதை கேட்ட சோ கண்ணதாசன், கலைஞர் அவர் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு என்றும் கழக அந்தஸ்தை இதன் மூலம் இழக்கப் போகிறார் என்றும் கூறினார்.மேலும் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் மக்கள் பலம் இதன் மூலம் வெளிப்படும் என்றும் அதை பார்த்து திராவிட கழகமே மிரளப்போகிறது என்றும் கூறியிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே இந்த செய்தி வெளிவந்து சிறிது நேரத்திலயே திரளான மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை பார்க்க அவரது வீட்டின் முன் காத்துக் கொண்டிருக்க கண்ணதாசனும் ஆச்சரியப்பட்டாராம். எப்படி கலைஞருக்கு இருக்கும் அரசியல் அறிவை ஒப்பிடும் போது எம்.ஜி.ஆருக்கு குறைவு தான். அப்படி இருக்கையில் எப்படி இந்த மாதிரி என்று ஆச்சரியப்பட்டாராம் கண்ணதாசன்.
Rashimika mandana:…
'திரைக்கதை மன்னன்'…
Actress vedhika:…
ஆறு ஆண்டுகளுக்கு…
ஊதாரி என்ற…