தெலுங்கு டப்பிங் படத்திற்கு நோட்டீஸ் விட்ட எம்.ஜி.ஆர்... பதில் நோட்டீஸால் பின்வாங்கிய பரிதாபம்... என்ன நடந்தது...
எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தனது படத்திற்கு இன்னொருவர் வாய்ஸ் கொடுப்பது என்பதே பிடிக்காது. அதற்காகவே டப்பிங் படங்களை அதிகமாக தவிர்த்துவிடுவார். ஆனால் இப்படி டப் செய்யப்பட்ட தன்னுடைய படத்திற்கு நோட்டீஸ் விட்டார். ஆனால் பதில் நோட்டீஸால் கப்சிப்பான சம்பவமும் நடந்தேறியது.
தாய்க்குப் பின் தாரம்:
1956ல் சாண்டோ சின்னப்பதேவர் சென்னைக்கு வந்து தயாரிப்பு நிறுவனத்தினை துவக்கினார். அவருக்கு முதல் படமாக தாய்க்குப்பின் தாரம் அமைந்தது. இதில் எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் திருமுருகன் இயக்கி இருந்தார். படத்தின் படப்பிடிப்புகள் பாதி நடந்து வந்த நிலையில் சின்னப்ப தேவரிடம் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு காசில்லை.
என்ன செய்வது என பதறியவருக்கு கொண்ட வாஹினி ஸ்டுடியோ உரிமையாளர் நாகிரெட்டி உதவிக்கு வந்தார். ஆனால் அவர் கொடுக்கும் காசுக்கு ஈடாக படத்தின் நெகட்டிவ் ரைட்ஸை வாங்கி கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஸ்டுடியோ வாடகை, கேமரா உட்பட தேவையான கருவிகளின் வாடகை எல்லாவற்றையும் செய்வதாக கூறி ஒப்பந்தம் செய்தார்.
எம்.ஜி.ஆரின் கோபம்:
இந்த ஒப்பந்தம் நிறைவேறிய சில மாதங்களிலேயே படத்தினை கடகடவென்று முடித்து விட்டாராம் சின்னப்ப தேவர். படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அப்படத்தில் எம்.ஜி.ஆர் காளை மாட்டை அடக்கும் காட்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து படத்தினை தெலுங்கில் டப்பிங் செய்து நாகிரெட்டி வெளியிட்டார். தெலுங்கில் ஹிட் அடித்தது. ஆனால் இந்த செய்தி எம்.ஜி.ஆரை டென்ஷனாக்கியது.
தன் திரைப்படத்திற்கு இன்னொருவர் குரல் கொடுப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது அவருக்கு பெரிய அவமானமாக இருந்தது. இதனால், சின்னப்ப தேவருக்கு என் அனுமதி இல்லாமல் தெலுங்கில் டப்பிங் செய்து இருக்கிறீர்கள். இதனால் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை கண்டு நடுங்கி போன சின்னப்ப தேவர் வாஹினி ஸ்டுடியோவிற்கு படையெடுத்தார். அங்கு நாகி ரெட்டியிடமும், இருந்தவர் சுப்பாராவ் என்கிற சக்கரபாணி.
சின்னப்ப தேவரின் பதில் நோட்டீஸ்:
அவரின் ஆலோசனைப்படி பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் தாய்க்குப் பின் தாரம் படத்தில் வரும் காளையுடன் ஜெயிக்க வேண்டிய காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டு தான் நீங்கள் கையெழுத்து போட்டீர்கள். ஆனால்,படப்பிடிப்பின் போது போலி கொம்புகளை மட்டுமே பிடித்து நடித்திருக்கிறார்கள். மற்ற காட்சிகளில் உங்களுக்கு டூப் போடப்பட்டுள்ளது. அதனால் எங்களுக்கு மேலும் வசூல் குறைந்தது. இதை நீங்கள் தான் ஈடுகட்ட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. இதை கேஸாக எடுத்து சென்றால் தான் நடிக்கவில்லை. அது டூப் என தெரிந்து விடும் என நினைத்த எம்.ஜி.ஆர். அந்த பிரச்சனையில் அப்படியே பின்வாங்கினார்.