அசிங்கப்படுத்திய ஜானகி குடும்பத்தினர்!.. எம்.ஜி.ஆரின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?...
50,60களில் தமிழ் திரையுலகின் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். 30 வருடங்களுக்கும் மேல் நாடகத்தில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்தவர். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறியவர். அதிகமான ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
சொந்த வாழ்வில் தங்கமணி என்பவரை முதலில் திருமணம் செய்தார். ஆனால், அவர் இறந்துவிட்டார். அடுத்து சதானந்தவதி என்பவரை திருமணம் செய்தார். அவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையானார். அதன்பின்னரே அவர் அப்போது கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த ஜானகியை திருமணம் செய்து கொண்டார். ஜானகியை திருமணம் செய்யும்போது எம்.ஜி.ஆர் துணை நடிகர் மட்டுமே. ஜானகியோ பெரிய நடிகையாக பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரின் காதல் விவகாரம் ஜானகியின் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் எம்.ஜி.ஆரை அழைத்து பேசியுள்ளனர். ‘ஜானகியிடம் இருக்கும் பணத்திற்காகத்தான் அவரை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?’ என சண்டை போட்டுள்ளனர். அப்போது எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணிக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தது.
இதையும் படிங்க: என்னது ‘7ஜி ரெயின்போ காலனி-2’வில் இவங்கதான் ஹீரோயினா? பேசியே கொண்டுருவாங்களே?
எனவே, ‘அந்த குழந்தைகளை காப்பாற்றத்தான் நீ ஜானகியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாய்’ என ஜானகி குடும்பத்தினர் பேசியுள்ளனர். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சக்கரபாணிக்கும் கோபம் வர ‘ராமச்சந்திரா.. ஜானகி வேண்டாம்’ என சொல்ல எம்.ஜி.ஆரோ ‘அண்ணே நான் சம்பாதிப்பேன்.. ஜானகியை நன்றாக பார்த்து கொள்வேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் சம்பாதிப்பீர்கள்’ என சொன்னாராம்.
மேலும், ஜானகி குடும்பத்தினரிடம் ‘ஜானகி சம்பாதித்த பணத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு வேண்டாம்’ என சொன்னாராம். அதோடு,ஜானகியை பார்த்து ‘உங்கள் சொத்து எனக்கு எதுவும் வேண்டாம் என எழுதிக்கொடுத்து விட்டு வா’ என்றாராம். ஜானகியே அப்படியே எழுதிக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆருடன் சென்று அவரை திருமணம் செய்து கொண்டாராம். சொன்னபடியே பல படங்களில் நடித்து பெரிய ஹீரோவாக மாறி ஜானகியை நன்றாக பார்த்து கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகவும் ஜானகி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் ஆளாக ஓடி வந்து காப்பாற்றிய எம்ஜிஆர், கண் கலங்கிய முத்துராமன்- சுவாரஸ்ய சம்பவம்