ஒவ்வொரு படப்பிடிப்பு முடியும் போதும் எம்ஜிஆர்-ஜெயலலிதா பண்ற ஒரே விஷயம்!..

mgr
கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என பல காப்பியங்கள் தமிழில் தொன்று தொட்டு இருக்கிறதை போல தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் எம்ஜிஆர் புராணம் என்ற ஒரு காப்பியத்தை எடுக்கலாம். அந்த அளவுக்கு எம்ஜிஆரை பற்றி பல பல சுவாரஸ்ய தகவல்கள் நம் செவி சாய்க்கின்றன.
அதைக் கேட்கும் போது மனுஷன் இப்படியெல்லாம் இருந்திருக்கிறாரா என்றே ஆச்சரியப்பட வைக்கிறது. பொதுவாக வள்ளல் குணம் படைத்தவர், இரக்கக் குணம் படைத்தவர், உதவும் மனப்பான்மை எனஅவரை பற்றி தகவல்கள் வெளிவரும் போது புல்லரிக்க வைக்கின்றது.

mgr1
பழம்பெரும் நடன இயக்குனரான புலியூர் சரோஜா எம்ஜிஆருடன் பல படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்ன சில தகவல் நம்மை ஆச்சரியப்பட வைத்தது. அதாவது ஒவ்வொரு படப்பிடிப்பு முடிந்ததும் எம்ஜிஆர் அனைவருக்கும் சாப்பாடு போடுவாராம்.
அவரே வேட்டியை மடிச்சுக் கட்டி தலையில் தலப்பாகை கட்டி அனைவருக்கும் பரிமாறுவாராம். அது முடிந்ததும் அது எம்ஜிஆர்- ஜெயலலிதா நடித்தப் படம் என்றால் சாப்பாடு முடிந்ததும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போய் நிற்பார்களாம்.

mgr2
சாப்பிட்டு வரும் போது ஜெயலலிதா அனைவருக்கும் சேலை துணிமணிகளை கொடுப்பாராம். எம்ஜிஆர் வேட்டி சட்டைகளை கொடுப்பாராம்.அது முடிந்து அனைவரையும் அவரின் அறைக்கு வரச் சொல்லுவாராம். அங்கு எம்ஜிஆர் அமர்ந்திருக்கும் இரு பக்கமும் சாக்கு மூடைகள் இருக்குமாம்.
இதையும் படிங்க : பாலிவுட்டையே கதிகலங்க வைத்த கமலின் படம்!.. 25 வருடங்களை கடந்தும் கர்ஜிக்கும் உலகநாயகன்..
தன் இரு கைகளாலும் எவ்வளவு அள்ள முடியுமோ அந்த அளவுக்கு காசுகளை அள்ளிக் கொடுப்பாராம். முத்து படத்தில் ரஜினி எப்படி காசுகளை மக்களுக்கு அள்ளிக் கொடுப்பாரோ அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் எம்ஜிஆர் அப்படியே இருந்திருக்கிறார். இதை பற்றி புலியூர் சரோஜா கூறும் போது பிரமிப்பாக கூறினார்.