ஜெயலலிதா ஒரு விஷம்!..ஜாக்கிரதையாக இரு!..எம்.ஜி.ஆர் எச்சரித்த அந்த நபர் யாருனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2022-10-17 10:47:17  )
jaya_main_cine
X

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா சிறிய வயதாக இருக்கும் போதே அவரும் அவரது அண்ணனும் எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து எம்.ஜி.ஆர் போடுகிற சண்டைகளை போடுவார்களாம். அதில் எம்.ஜி.ஆராக இருப்பவர் ஜெயலலிதாவாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரை சிறுவயதில் இருந்தே மனதில் பதித்தவர் ஜெயலலிதா.

jaya1_cine

மேலும் எம்.ஜி.ஆரும் சினிமாவில், பொது வாழ்க்கையில் ஏகப்பட்ட பெண்களை சந்தித்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதா மாதிரியான ஒரு தைரியமான பெண்ணை அவரது வாழ்வில் சந்தித்ததில்லை. ஆகவே இருவருக்கும் இருந்த இந்த வியப்பினால் தான் இருவரும் ஒன்றாக இணைந்தார்கள் அரசியல் வரை.

இதையும் படிங்க : நடிப்பை குறை சொன்ன உதவி இயக்குனர்… சிவாஜி காதுக்கு வந்த விஷயம்… ஆனா நடந்தது என்ன தெரியுமா??

jaya2_cine

மேலும் இருவருக்குள்ளும் இருந்த இந்த வியப்பினால் ஏற்பட்ட நெருக்கம் நாளடைவில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்திருக்கிறது. ஒரு சமயம் எம்.ஜி.ஆரை பார்க்க அப்போது மாணவர் அணி தலைவராக இருந்த ஒருவர் வந்திருக்கிறார். அவரை பார்க்க ஏராளமானோர் வந்தனராம். அதை பார்த்து பொருத்துக் கொள்ளாத ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் உங்களுக்கு நான் முக்கியமா? இல்லை அவர் முக்கியமா ? ஒரு முடிவை சொல்லுங்கள். அவர் தான் முக்கியம் என்றால் நான் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன் என்று கூறினாராம்.

jaya3_cine

ஏனெனில் அந்த மாணவர் அணியின் தலைவரை பார்க்க அவ்ளவு கூட்டம் வந்ததை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். எதுவானாலும் நாம் தான் முதலிடம் என்று நினைக்கக்கூடியவராம். இந்த சம்பவத்தால் அந்த மாணவர் அணி தலைவர் எம்.ஜி.ஆரிடம் நான் போகிறேன் என்று கூறி சென்று விட இன்னொரு நாள் அந்த தலைவரிடம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை பற்றி ‘அவள் ஒரு காலை சுற்றிய பாம்பு, கொத்தாமல் விடாது, கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு’ என்று எச்சரித்தாராம் எம்.ஜி.ஆர். ஏனெனில் ஜெயலலிதாவை பற்றி எம்.ஜி.ஆர் நன்கு அறிந்தவர். ஜெயலலிதாவிற்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதை எதற்கும் அனுமதிக்கமாட்டாராம். இந்த பதிவை ஜெயலலிதாவை பற்றி ஆராயும் முனைவர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

Next Story