தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் கலைஞர் இவர்கள் இருந்த காலத்தில் சினிமாவை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. ஆனால் இவர்கள் இருவரும் அரசியலில் கோலோச்சிய பிறகு எதிர் எதிராக நின்று தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
எம்ஜிஆர் கலைஞர் ஒன்றாக முதலில் ஒரே கட்சியில் இருக்கும் போது ஒற்றுமையாக தான் இருந்தார்கள். திமுகவிலிருந்து எப்பொழுது எம்ஜிஆர் பிரிந்து வந்தாரோ அதிலிருந்து அரசியலில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தது.
இந்த சமயத்தில்தான் ஒரு படத்தின் பிரச்சனையால் எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் ஒரு சிறு மோதல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் டி என் பாலு. அவர் இயக்கிய படம் சட்டம் என் கையில் இந்தப் படத்தில் கமல் ஸ்ரீபிரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.
எம்ஜிஆரும் கருணாநிதியும் முதலில் ஒன்றாக ஒரே கட்சியில் இருக்கும் போது டி என் பாலு எம்ஜிஆர் மீது மிகவும் பற்று உள்ளவராக இருந்தாராம். எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போன பிறகு திமுகவின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக கருணாநிதி யின் கூடவே இருந்தாராம் டிஎன் பாலு. அந்த சமயத்தில்தான் சட்டம் என் கையில் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி விழாவின் போது எம்ஜிஆர் தான் முதலமைச்சராக இருந்தாராம்.
அப்போது அந்தப் படத்தில் எங்கள் தங்க ரத்தினம் என்ற ஒரு பாடலில் நல்ல நல்ல தலைவர்கள் நாட்டில் பிறந்தார் ஏழை வீட்டில் பிறந்தார் என்ற ஓரு வரி. அப்போது கருணாநிதியின் படத்தை போட்டு போஸ்டர் ஒட்டி இருந்தாராம் டி என் பாலு. இதில் மிகவும் கடுப்பாகி விட்டாராம் எம்ஜிஆர். மேலும் அந்தப் படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம்பெற அதுவும் பெரிய சர்ச்சையாக மாறியதாம்.
இதற்கிடையில் டிஎன் பாலு அந்த படத்தின் வெற்றி விழாவிற்காக அழைப்பிதழில் தலைமை ஏற்பது என கருணாநிதியின் படத்தை போட்டு முதல் பத்திரிக்கையாக எம்ஜிஆருக்கு போய் வைத்தாராம். அதில் மீண்டும் எம்ஜிஆர் கடுப்பாகி விட்டாராம். வர வர இவன் ரொம்ப ஓவரா போறான் என தன் உடன் இருந்தவர்களிடம் எம்ஜிஆர் கூறினாராம்.
அதன் பிறகு குடிபோதையில் தகராறு செய்ததாக டிஎன் பாலு அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டாராம். அந்தப் படத்தின் வெற்றி விழாவும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க டி என் பாலு ஐந்து போலீசார்களுடன் விழாவிற்கு வந்தாராம். அப்போது மேடையில் படத்தின் இயக்குனர் பெயரை அறிவிக்க டிஎன் பாலு விருதை வாங்குவதற்கு அவருடைய மகனுடன் சென்றாராம்.
ஆனால் விருதை வாங்கியதோ அவருடைய மகன் மட்டும்தானாம். பாலுவை காணவில்லையாம். அவர் அந்த ஹோட்டலின் பின் வாசல் வழியாக ஒரு காரில் பெங்களூருக்கு தப்பி சென்று விட்டாராம் .அதற்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தவரே கருணாநிதி தானாம். காரை ஓட்டி சென்றது கமலின் சகோதரரான சாருஹாசன் என இந்த சுவாரசிய தகவலை கூறிய டிஎன் பாலுவின் மகன் தெரிவித்தார்.