தமிழ் சினிமாவில் தற்போதும் ஒரு சகாப்தமாக பார்க்கப்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர் திரையுலகினருக்கு மட்டுமல்ல தமிழக மக்கள் மனதிலும் நீங்க இடம் பிடித்த நல்ல தலைவராக இன்றளவும் பார்க்கப்படுகிறார்.
இவர் தான் முதலமைச்சராக பணியில் இருந்த போதே மக்கள் மனதில் நீங்க துயரத்தை தந்து மறைந்துவிட்டார். இவர் உயிரிழந்ததிற்கு காரணமாக இவரது சிறுநீரகம் செயலிழந்து அதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து மூத்த மருத்துவர் காந்திராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டபோது, எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. அதனால் உடனடியாக சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது எளிதான காரியம் தான். தமிழகத்திலேயே அதனை செய்துவிடலாம்.
ஆனால், எம்.ஜி.ஆருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவது வெளியில் தெரிந்தால், தொண்டர்கள் கூட்டம் கூடிவிடும். ஆதலால் எந்த மருத்துவமனையும் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொள்ளவில்லையாம். உடனே தான் வெளிநாட்டிற்கு பயணப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம்.
இதையும் படியுங்களேன் – பக்கா மதுரைகாரராக இறங்கி அடிக்க தயாராகும் அஜித்.! சத்தியமா இது சிறுத்தை சிவா இல்லை.!
மேலும், அவருக்கு சிறுநீரகம் தானம் கொடுத்தது யார் என வெகு நாட்களாக தெரியாதாம். பின்னர் தான் அது தனது அண்ணன் மகள் லீலாவதி என ஒரு செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டாராம். ‘ இதனை தான் மூத்த மருத்துவர் காந்திராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…