தமிழ் சினிமாவில் எண்பதுகளில் ரஜினி, கமல், விஜயகாந்த் இவர்களுக்கு ஒரு சரியான வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து மாஸ் காட்டிய நடிகர் சத்யராஜ் .நூறாவது நாள் திரைப்படத்தில் மொட்டை தலையுடன் அவர் வில்லனாக நடித்த அந்த கதாபாத்திரம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அதன்பிறகு வால்டர் வெற்றிவேல் ,அமைதிப்படை ,வேதம் புதிது ,கடலோர கவிதைகள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து 90 க்கு பிறகு ஹீரோவாகவே இந்த தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கினார்.
சமீப காலமாக பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு தேடப்படும் நடிகராக மாறி இருக்கிறார் சத்யராஜ். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் இவர் அதிகமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜீப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருந்திருந்தார் சத்யராஜ் .
இதையும் படிங்க: AR.Rahman: மூத்த மகளிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்ன வார்த்தை… அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..!
சத்யராஜ் என்றாலே இரண்டு விஷயங்கள் நம் நினைவிற்கு வரும். ஒன்று பெரியார் கொள்கை மற்றொன்று எம்ஜிஆர் .பெரியார் கொள்கையின் மீது தீவிர பற்று உடையவர் சத்யராஜ். எம்ஜிஆர் மீதும் அளவு கடந்த பாசம் உள்ளவர். எம்ஜிஆர் கர்லா கட்டை கூட சத்யராஜிடம் தான் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும் .இந்த நிலையில் எம்ஜிஆரை பற்றி ஒரு தகவலை சத்யராஜ் பேட்டியில் கூறியிருக்கிறார் .
வேதம் புதிது திரைப்படத்தை எம்ஜிஆர் ஒருமுறை பார்க்க வந்தாராம். அந்த படத்தை பார்த்துவிட்டு சத்யராஜ் கையைப் பிடித்து மூன்று முறை முத்தம் கொடுத்தாராம் எம்ஜிஆர் .அது என்னால் மறக்க முடியாத ஒரு தருணம் என கூறி இருக்கிறார் சத்யராஜ் .அது மட்டுமல்ல வேதம் புதிது திரைப்படம் அப்போது சென்சார் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு ரிலீஸ் பண்ண முடியாத சூழ்நிலையில் இருந்ததாம்.
இதையும் படிங்க: கோலிவுட்டின் நெப்போடிஸ குடும்பமே இவங்கதான்… நீங்களாம் பேசலாமா?
படத்தை பார்த்த எம்ஜிஆர் உடனே பாரதிராஜாவிடம் தியேட்டரில் படத்தை போடு என கூறியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா சென்சார் பிரச்சினை இருப்பதாக சொல்ல பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் நீ தைரியமாக தியேட்டருக்கு கொண்டு வா என கூறினாராம் எம்ஜிஆர். இதைக் குறிப்பிட்டு பேசிய சத்யராஜ் அவர் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார் .நான் ஆணையிட்டால் ரேஞ்ச் தான் என் தலைவர் எனக் கூறினார் சத்யராஜ். மேலும் எம்ஜிஆர் பார்த்த கடைசி படமும் வேதம் புதிது திரைப்படம்தானாம். அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போறதுக்கு 10 நாளுக்கு முன்பாக வந்து இந்தப் படத்தை பார்த்தாராம்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…