விலகிய எம்ஜிஆர்; சிவாஜியை நடிக்க வைத்த டைரக்டர்.. அட அந்த படமா?!.
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்தபோதிலும் அக்காலகட்டத்தில் இருவரும் போட்டி நடிகர்களாகவே இருந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பிரபல இயக்குனர் எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையை சிவாஜிக்காக சற்று மாற்றி ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் யார்? அது என்ன படம்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர். இவர் தொடக்கத்தில் பல திரைப்படங்களுக்கு கதாசிரியராக இருந்தார். அதனை தொடர்ந்து “கல்யாண பரிசு” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ஆனார். அதனை தொடர்ந்து “தேன் நிலவு”, “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதர், எம்.ஜி.ஆரை வைத்து “அன்று சிந்திய ரத்தம்” என்ற திரைப்படத்தை தொடங்கினார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் கதை பிடிக்காமல் அந்த படத்திலிருந்து எம்.ஜி.ஆர் விலகிவிட்டார்.
எனவே, அந்த கதையில் சில விஷயங்களை மட்டும் மாற்றி “சிவந்த மண்” என்று பெயர் வைத்து சிவாஜியை வைத்து ஸ்ரீதர் அப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்தது.
எனினும் பின்னாளில் இயக்குனர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆரை வைத்து, “உரிமை குரல்”, “அண்ணா நீ என் தெய்வம்”, “மீனவ நண்பன்”, ஆகிய திரைப்படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? வெயிட்ட குறைச்சு படாத பாடு பட்ட பிரபலங்கள்