எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்து ரசித்த விஜயகாந்த் பாடல்!.. அட இது தெரியாம போச்சே!..

by சிவா |
mgr vijayakanth
X

50,60 களில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் இருந்த சினிமாவுக்கு வந்து படிப்படியாக முன்னேறியவர். ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சினிமாவில் கிடைத்த புகழால் தமிழக முதல்வராகவும் மாறினார்.

ஒருபக்கம், மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர் விஜயகாந்த். இவரும் வாய்ப்புக்காக பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி, நடித்து காட்டி வாய்ப்பு கேட்டவர்தான். வாய்ப்பு கிடைக்காமல் பல அவமானங்களை சந்தித்துள்ளார். சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து பின்னர் ஹீரோவாக மாறினார். இவரும் எம்.ஜி.ஆரை போலவே ஆக்‌ஷன் படங்களில் நடித்து பின்னாளில் அரசியலும் இறங்கியவர். இவரை பார்த்த ‘எம்.ஜி.ஆர் என்னை போலவே இவருக்கும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். பின்னாளில் அரசியலில் ஒரு இடத்தை பிடிப்பார்’ என அப்போதே கூறினார். அவர் சொன்னபடியே நடந்தது.

vijayakanth

vijayakanth

எம்.ஜி.ஆர் தான் நடித்த படம் மட்டுமில்லாமல் மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களையும் பார்த்துவிடுவார். அவருக்கு பிடித்திருந்தால் சம்பந்தப்பட்ட ஹீரோவை பாரட்டுவார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா இயக்கும் படங்கள் என அனைத்தையும் பார்த்துவிடுவார்.

இதையும் படிங்க: விஜயகாந்த போல வீரமா இருந்தா செய்வினை வச்சிடுவாங்க சாமி!.. வைரலாகும் வீடியோ..

அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் உழவன் மகன். இந்த படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் இது நான் நடிக்க வேண்டிய படம் எனவும் கூறியிருந்தார். அதன்பின் எம்.ஜி.ஆர் மறைந்துவிட்டார். உழவன் மகன் வெளியாகி 7 வருடங்கள் கழித்து அதே அரவிந்தராஜ் இயக்கத்தில் கருப்பு நிலா என்கிற படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அரவிந்தராஜ் ‘கருப்பு நிலா’ படத்தின் சில காட்சிகள் எம்.ஜி.ஆரின் ராமபுரம் தோட்டத்தில் இருந்த காது கேளாதோர் பள்ளியில் எடுக்கப்பட்டது. அதற்காக நானும், விஜயகாந்தும் அங்கே சென்றிருந்த போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அங்கே இருந்தார்., விஜயகாந்தை பார்த்ததும் அவரின் அருகில் வந்த அவர் ‘நீங்கள் நடித்த உழவன் மகன் படத்தில் மாட்டு வண்டி ஓட்டிகொண்டே நீங்கள் பாடும் பாடலை அவர் அடிக்கடி பார்ப்பார். அந்த வீடியோவை திரும்ப திரும்ப போட்டு பார்த்து ரசிப்பார்’ என சொன்னார்’ என அரவிந்த்ராஜ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய்கிட்ட அவர் பையனயே பேச விடமாட்றாங்க!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்!..

Next Story