எனக்கு பாட்டெழுதாம வெளிய போக முடியாது!. கண்ணதாசனை அறையில் பூட்டிய எம்.ஜி.ஆர்....
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாக பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், சோகம், கண்ணீர், விரக்தி, தத்துவம், மரணம் என எல்லாவற்றையும் பாடியவர். குறிப்பாக பெரிய பெரிய தத்துவங்களையும் தனது எளிமையான வரிகள் மூலம் சொல்லி கடைக்கோடி ரசிகர்களுக்கும் சேர்த்தவர்.
அதனால்தான் இத்தனை வருடங்கள் கழித்தும் அவரின் பாடல்கள் காற்றில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் கூட கண்ணதாசனின் வரிகளுக்காகவே பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 50,60களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க:dநான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா’.. உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ உள்ளிட பல முக்கிய பாடல்களை கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். ஒருகட்டத்தில் சிவாஜி உள்ளிட்ட மற்ற படங்களுக்கும் கண்ணதாசன் பாடல்களை எழுதியதால் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல்களை எழுத அவருக்கு நேரம் இல்லாமல் போனது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…
அதனால், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற சில பாடலாசிரியர்களை எம்.ஜி.ஆர் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் ‘தாய் சொல்லை தட்டாதே’ படம் உருவானபோது அப்படத்திற்கு பாடல்களை எழுத கண்ணதாசனுக்கு நேரமில்லை. எனவே, அவரின் அறையை பூட்டிய எம்.ஜி.ஆர் ‘எனக்கு பாடல் எழுதுவிட்டுதான் நீங்கள் வெளியே போக வேண்டும்’ என சிரித்துக்கொண்டே சொன்னாராம். அப்போது கண்ணதாசன் எழுதியதுதான் ‘சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தான்’ பாடலாகும். இந்த பாடலில் எம்.ஜி.ஆருக்கும், தனக்கும் உள்ள நட்பை மையமாக வைத்து பல வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்
பின்னாளில், எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான பாடலாசிரியராக வாலி மாறினார். ஆனாலும், எம்.ஜி.ஆர் முதல்வரான பின் கண்ணதாசனை தமிழக அரசின் அரசவை கவிஞராக நியமித்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..