திருமணத்திற்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா!.. தள்ளி வைத்து தவிர்த்த எம்.ஜி.ஆர்!.. எழுத்தாளர் பகீர் தகவல்!..

Published on: April 7, 2024
mjir jayalaita
---Advertisement---

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் வெற்றி வலம் வந்தவர்கள். இவர்களிருவரும் அன்றைய காலத்தில் காட்டி வந்த நெருக்கம் ஊரறிந்த உண்மை. இவர்கள்  நடித்த படங்கள் ‘பட்டி தொட்டி’யெல்லாம் பேசப்பட,  அரசியலிலும் இவர் சென்ற இடம் எல்லாம் வெற்றி தான் என்ற நிலையுமே இருந்து வந்தது.  எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான வாஸந்தி ஜெயலலிதாவின் மனமும் மாயையும் என்கிற நூலில் பல தகவல்களை பதிவிட்டிருக்கிறார்.

em.ji.aar - jeyalalita
em.ji.aar – jeyalalita

ஜெய்சங்கருடன் ஒரு படத்தில் நடித்து வந்த ஜெயலலிதா, அவருடன் நெருக்கம் காட்டிவர, அந்த செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு சென்றடைய, ஜெய்சங்கரை கூப்பிட்டு இந்த படத்திலிருந்து விலக சொன்னாராம் எம்.ஜி.ஆர். அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்த ஜெய்சங்கரோ தொடர்ந்து நடிப்பதிலேயே குறியாக இருந்தாராம்.  பின்னர் ஜெய்சங்கரின் மனைவியை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் படத்திலிருந்து உங்கள் கணவரை விலகி விடச்சொல்லுங்கள் என கடுமையாக சாடினாராம்.

vasanthi

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் வாய்ப்புகளை இழந்து, தவித்த ஜெயலலிதா தெலுங்கு பட உலகிற்கு சென்று அங்கே தந்து திறமையை காட்ட தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பேசும் பொருளாக மாற, அவருக்கு வாய்ப்புகள் அங்கே வரத்துவங்கியது.தெலுங்கு நடிகர் சோபன்பாபுவிடம் சற்றே நெருக்கம் காட்டிய ஜெயலலிதா அவர் படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று வந்தாராம்.   இந்த விஷயமும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு செல்ல, தெலுங்கு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியதாம்.

mgr -jealalitha1
mgr -jealalitha1

நடிக்க நேரமில்லாமல் இருந்த நிலை மாறி, படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட ஜெயலலிதா பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்து, தனக்கு இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியும்,  தனது வாழ்க்கை வரலாற்றை தொடர்ச்சியாக எழுதி வந்தாராம்.

இப்படி இருக்கையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சாந்தினியிடம், எம்.ஜி.ஆரை காதலிப்பதாகவும், அவரை மனமுடிக்க ஆசை படுவதாகவும் கூறியதை கேட்டு அவர்  அதிர்ச்சியடைந்தாரம்.  அதேநேரம், ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும் , அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பத்திரிக்கையாளர் சோலே-வோ இறுதி வரை இருவரும் மணமுடிக்கவில்லை என உறுதி பட  கூறியிருக்கிறார்.

“அம்மு” என ஜெயலலிதாவை அன்பாக அழைப்பதை பழக்கமாக வைத்திருந்த எம்.ஜி.ஆர் கூட ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என சிந்திக்க துவங்கினாராம்.  ஆனால் சின்னப்பா தேவரோ,  ‘ராமச்சந்திரா,  நீ திருமணம் செய்து கொண்டால், உனது வாழ்வே திசை மாறிவிடும், அதனால் இந்த முடிவை எடுத்து விடாதே’ என உறுதியாக கூறினாராம். அவரின் பேச்சை மீற முடியாமலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மணமுடிக்க இறுதி வரை சம்மதிக்ககாமலேயே இருந்து வந்தாராம்.

இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் வீடியோ லின்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Sankar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.