Cinema History
ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..
திரையுலகில் சில நடிகர்களுக்கு மட்டுமே மக்களிடம் பெரிய கிரேஸ் இருக்கும். அவர்கள் வந்து நின்றாலே போதும் படம் வெற்றிதான். தமிழில் எம்.ஜி.ஆர், தெலுங்கில் என்.டி.ராமாராவ் ஆகியோரை முக்கிய உதாரணமாக சொல்ல முடியும். 1960,70களில் இவர்கள் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தார்கள்.
இவர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடப்பார்கள். அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க நடிகைகள் போட்டி போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தில் வாய்ப்பு என்றாலே அப்படத்தில் பணிபுரியும் சின்ன சின்ன நடிகர், நடிகைகள் முதல் தொழில் நுட்ப கலைஞர்கள் வரை எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்.
இதையும் படிங்க: விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..
ஏனெனில், எம்.ஜி.ஆர் படத்தில் வேலை செய்திருக்கிறேன் என சொல்வது அவர்களுக்கு பெரிய கவுரமாகவும், பெருமையாகவும் நினைத்தார்கள். அதோடு, தங்களுக்கு வாய்ப்புகளும் அதிகம் வரும் என நம்பினார்கள். எம்.ஜி.ஆர் அப்படி பலருக்கும் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
வாலி போன்ற புதிய பாடலாசிரியர்கள் மற்றும் பல புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கி இருக்கிறார். வி.கே.ராமசாமி போன்ற சிலர் நடிகர்களை தயாரிப்பாளர் ஆக்க முயன்றார். ஆனால், அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. 1985ம் வருடம் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பியிருந்த நேரம் நம்பிராஜன் என்கிற தயாரிப்பாளர் அவர் தயாரித்திருந்த ‘குங்குமப் பொட்டு’ என்கிற படத்தை பார்க்க எம்.ஜி.ஆரை அழைத்தார்.
இதையும் படிங்க: சரோஜா தேவியா?.. ஜெயலலிதாவா?!.. எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு தட்டி தூக்கியது யார் தெரியுமா?!..
அந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சேர்ந்து நடித்த ‘குங்கும பொட்டின் மங்களம்’ என்கிற பாடலை அவர் பயன்படுத்தி இருந்தார். படத்தை பார்த்து பாராட்டிய எம்.ஜி.ஆர் ‘எதாவது பண உதவி வேண்டுமா?’ என கேட்டிருக்கிறார். ஆனால், ‘குங்கும பொட்டின் மங்களம்’ பாடல் ஒன்றே போது இப்படத்தை வெற்றி பெற செய்துவிடும் என சொன்னார் நம்பிராஜன்.
அடுத்தநாள் தலைமை செயலகத்துக்கு நம்பிராஜை வர சொன்ன எம்.ஜி.ஆர் வரை கட்டியணைத்து இரட்டை விரல்களை காட்டி போஸ் கொடுத்து அதை புகைப்படம் எடுத்தார். அதை நம்பிராஜனிடம் கொடுத்து ‘படத்தின் துவக்கத்தில் இதை பயன்படுத்திகொள்ளுங்கள்’ என சொன்னார்.
அவரை எம்.ஜி.ஆர் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை பார்த்ததும் தியேட்டரில் விசில் மற்றும் கைத்தட்டல் சத்தம் காதை கிளித்தது. இந்த ஒரு காட்சிக்காகவே அப்படம் வெற்றியும் பெற்றது.