சங்கர் கணேசை மூன்று மாதம் பெண்டு கழட்டிய எம்.ஜி.ஆர்.. வந்தது ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..

by சிவா |   ( Updated:2023-05-25 06:46:07  )
shankar
X

50, 60களில் திரையுலகில் ஜாம்பாவானாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடிக்கும் படங்களில் பாடல்களின் மெட்டுக்களையும், வரிகளையும் கூட அவர்தான் முடிவு செய்வார். அவரின் முடிவே இறுதியானது. அவரின் முடிவுக்கு எதிராக இயக்குனரோ, தயாரிப்பாளரோ எதுவும் பேச மாட்டார்கள்.

குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் பாடல்களுக்காக அதிக மெனக்கெடல்களை எம்.ஜி.ஆர் எடுத்துக்கொள்வார். இசையமைப்பாளர் போட்டு கொடுக்கும் மெட்டுக்களில் சுலபத்தில் திருப்தி அடையமாட்டார். பல மெட்டுக்களை கேட்ட பின்னரே ஒரு முடிவுக்கு வருவார். பலமுறை இவரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் மாட்டிக்கொண்டு முழித்துள்ளார். அதனால்தான் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக வெளிவந்தது.

mgr

mgr

எம்.ஜி.ஆர் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் இதய வீணை. இந்த படத்திற்கு சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு டியூன் போட மூன்று மாதங்கள் ஆனது என்றால் நம்ப முடிகிறதா?.. ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த கணேஷ் ‘பாட்டுக்கான டியூனை வாசிக்க நானும் சங்கரும் எம்.ஜி.ஆரிடம் சென்றோம். ஆனால், எம்.ஜி.ஆர் திருப்தி அடையவில்லை. இப்படியே 3 மாதங்கள் போய்விட்டது. ஒரு நாள் இன்றைக்கு எப்படியும் எம்.ஜி.ஆர் டியூனை ஓகே செய்துவிடுவார் என நினைத்து சந்தோஷமாக போனோம்.

shankar ganesh

டியூனை வாசித்து காட்டியதும், ‘இந்த ட்யூனை வாசி.. அந்த டியூனை வாசி’ என எங்களை வேலை வாங்கினார். நாங்களும் சலிக்காமல் அவர் கேட்ட படி வாசித்து காட்டினோம். கடைசியாக 3 டியூன்கள் அவருக்கு பிடித்துப்போனது. அந்த மூன்று டியூன்களையும் ஒன்றாக சேர்த்து பாடிக்காட்டுங்கள் என்றார். கஷ்டப்பட்டு அதை ஒன்றாக சேர்த்து வாசித்து காட்டினோம். அது அவருக்கு பிடித்துப்போனது. இது ஓகே இதை ரெக்கார்ட் பண்ணுங்க என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்படி உருவான பாடல்தான் ‘பொன் அந்தி மாலை பொழுது’ பாடல் என அவர் பேசியிருந்தார்.

Next Story