பாரதிராஜா எடுத்த ஃப்ளாப் படத்தை பிளான் பண்ணி ஓட வைத்த எம்.ஜி.ஆர்… இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்களோ?
1984 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி, பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புதுமைப் பெண்’. இத்திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் மதுரை மினி பிரியா திரையரங்கில் 208 நாட்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. இவ்வாறு ஒரு பிரம்மாண்ட வெற்றித் திரைப்படமாக ‘புதுமைப் பெண்” அமைந்திருந்தாலும், இத்திரைப்படம் வெளிவந்தபோது அட்டர் ஃப்ளாப் ஆனது.
ஆம்!.. அதாவது “புதுமைப் பெண்” திரைப்படம் வெளிவந்த புதிதில் இத்திரைப்படம் மக்களை ஈர்க்கவில்லை. திரையரங்குகள் காத்துவாங்கியது. ஆதலால் பாரதிராஜா மிகுந்த மனக்கலக்கத்திற்கு உள்ளானாராம். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரு பலமான திட்டத்தை செயல்படுத்தி இத்திரைப்படத்தை வெற்றித்திரைப்படமாக ஆக்கியுள்ளார். அவர் அப்படி என்ன செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
“புதுமைப் பெண்” திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்காத விரக்தியில் பாரதிராஜா இருந்தாராம். அவரது சிஷ்யரான பாக்யராஜ் இயக்கிய “முந்தானை முடிச்சு” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், “சிஷ்யன் படம் ஓடிவிட்டது, என்னுடைய படம் ஓடவில்லையே” என புலம்பிக்கொண்டிருந்தாராம்.
அக்காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். பாரதிராஜா, எம்.ஜி.ஆர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அதே போல் எம்.ஜி.ஆரும் பாரதிராஜா மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆரை பார்த்து பேசிவிட்டு வந்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்குமே என்று பாரதிராஜாவுக்கு தோன்றியிருக்கிறது.
அதன்படி எம்.ஜி.ஆரை சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிவிட்டு அவரை சென்று சந்தித்தார் பாரதிராஜா. அவருடன் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனும் சென்றிருக்கிறார். பாரதிராஜா, இவ்வாறு தனது திரைப்படம் தோல்வியை தழுவியதாக எம்.ஜி.ஆரிடம் கூறிக்கொண்டிருந்தாராம்.
உடனே எம்.ஜி.ஆர், செய்தி தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை அழைத்து, தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் “புதுமை பெண்” திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்குமாறு உத்தரவுப்போட்டாராம்.
அதன்படி அத்திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆதலால் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியதாம். இவ்வாறு “புதுமைப் பெண்” திரைப்படத்தை பக்காவாக பிளான் செய்து வெற்றிப்படமாக ஆக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: மணிரத்னத்திடமே மணிரத்னம் யார் என்று கேட்ட டாப் நடிகர்… யார்ன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!