எட்டாவது வள்ளலாக வாழ்ந்த எம்ஜிஆர்!.. ஆச்சரியப்படுத்திய இரு சம்பவங்கள்!.. தோண்ட தோண்ட வரும் அதிசயம்...

by Rohini |   ( Updated:2023-01-12 13:06:24  )
mgr
X

mgr

தமிழ் சினிமாவில் மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்களின் மைந்தனாக வாழ்ந்து மறைந்தாலும் அவரின் புகழ் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.

mgr1

mgr1

இவருக்கு வாழ்க்கையிலும் சரி சினிமாத்துறையிலும் சரி குருவாக இருந்தவர் கலைவாணர். கலைவாணரின் கொடை இருக்கே அது உலகளவு. அதை அப்படியே பின்பற்றி வந்தவர் தான் எம்ஜிஆர். இதைப் பற்றி ஒரு மேடையில் பேசிய சிவக்குமார் கடையேழு வள்ளல்கள் கேள்விப்பட்டிருப்போம்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த விஜயகாந்த் பாடல்.. அடேங்கப்பா!!

ஆனால் எம்ஜிஆர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்தார் என்று இரு சம்பவத்தை எடுத்து கூறினார். அவர் முதலமைச்சராக இருக்கும் போது அலுவலகத்திலிருந்து கோட்டைக்கு புறப்படும் போது வெளியே வாயிற்காவலில் ஏராளமான குரவன் குறத்தி மக்கள் காத்துக் கொண்டிருப்பார்களாம்.

mgr2

mgr2

அவர் கார் வெளியே வந்ததும் எம்ஜிஆரை சூழ்ந்து கொள்வார்களாம். அப்போது எம்ஜிஆர் அவர்களின் குழந்தைகள் இருந்தால் தூக்கிக் கொண்டு சில நேரம் வைத்திருந்து அதன் பின்னரே தருவாராம். இவரோ தக தகவென மின்னுகிற மேனி. ஆனால் அவர்கள் குளித்து பல நாள்கள் கூட ஆகியிருக்கும் அந்த காலத்தில். அப்படி இருந்தும் அந்த குழந்தைகளை வாங்கிக் கொண்டு முத்தமிட்டு அதன் பின் கொடுப்பாராம்.

மேலும் அவர்களிடம் தன் பையில் இருக்கும் கட்டு கட்டான ரூபாய்களை பிரித்துக் கொடுத்து விட்டு தான் செல்வாராம். இது அவர் செல்வாக்கில் இருந்த சமயம் நடந்த சம்பவம். ஆனால் உடுத்திக் கொள்ள ஆடையே இல்லாத சமயம் கூட மாறி மாறி துவைத்து தான் அதே ஆடையை உடுத்திக் கொண்டு வாய்ப்பு தேடி அலைவாராம் எம்ஜிஆர்.

mgr3

mgr3

அப்போது கையில் 10 ரூபாய் வைத்திருந்தாலும் யாராவது ரோட்டில் பிச்சைக்கேட்டால் அதில் 3 ரூபாயை கொடுத்து விட்டு தான் செல்வாராம். இப்படி மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்ட எம்ஜிஆரை மீண்டும் எப்போது காண்போம் என்று சிவக்குமார் சிலாகித்து பேசினார்.

Next Story