எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய சிவாஜி ரசிகருக்கு நேர்ந்த தீ விபத்து… நேரில் சென்று கண்ணீரை துடைத்த புரட்சித் தலைவர்… என்ன மனுஷன்யா!!
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று பலவாறு புகழப்படும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை குறித்தும் வள்ளல் குணத்தை குறித்தும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். அந்த அளவுக்கு காலத்தை தாண்டி மக்களின் மனதில் நிற்கும் நாயகனாகவும், தலைவனாகவும் திகழ்ந்து வருகிறார் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் தன்னை மிகவும் மோசமாக விமர்சித்த சிவாஜி ரசிகரும் நடிகருமான ஒருவருக்கு தீ விபத்து ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர் அவரை நேரில் சென்று பார்த்த நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1970களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் சசிக்குமார். இவர் “காசேதான் கடவுளடா”, “அரங்கேற்றம்”, “பாரத விலாஸ்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு மிகத் தீவிரமான சிவாஜி ரசிகர். மேலும் சிவாஜி ரசிகர் மன்றக் கூட்டங்களில் பல முறை எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு நாள் சசிக்குமாரின் மனைவி அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்களை மருத்துவமனையில் சந்திக்க எம்.ஜி.ஆர் வந்திருந்தாராம்.
அப்போது தனது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருந்த சசிக்குமார், “நான் உங்களை கடுமையாக திட்டியுள்ளேன். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் என்னை பார்க்க வந்துள்ளீர்கள்” என கண்ணீர் மல்க கூறினாராம். உடனே எம்.ஜி.ஆர், “இந்த தருணத்தில் அதை பற்றியெல்லாம் பேசலாமா?” என கூறி அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றாராம். எனினும் சசிக்குமாரும் அவர் மனைவியும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கார்த்திக் மீது எக்கச்சக்க புகார்… ஆனாலும் அவருக்கு ஏன் நிறைய பட வாய்ப்புகள் வந்ததுன்னு தெரியுமா?