Connect with us
mgr

Cinema History

இவன் ராசியில்லாதவன்! இவனால எல்லாம் போச்சி!.. எம்.ஜி.ஆரை திட்டி வந்த அவரின் அம்மா!..

எம்.ஜி.ஆர் என்றால் அவர் பெரிய நடிகர். அப்போதே பல லட்சம் சம்பளம் வாங்கியவர். பெரும் பணக்காரர்.. பல கோடிகளை வைத்திருந்தார்.. முதல்வராக இருந்தவர்.. பல சொத்துகளுக்கு சொந்தமானவர் என்றுதான் பொதுவாக பலரும் நினைப்பார்கள். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் கூட 47 வயது வரை அவர் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆரின் தந்தை கோபால மேனன் பாலக்காடு பகுதியில் நீதிபதியாக இருந்தவர். அதன்பின் பணிமாற்றம் காரணமாக இலங்கைக்கு அவரின் குடும்பம் இடம் பெயர்ந்தது. அங்கும் அவர் செல்வந்தனாகவே இருந்தார். அப்போது பிறந்தவர்தான் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயது இருக்கும்போது அவரின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இலங்கையின் சட்டப்படி சொத்துக்குள் அவரின் மனைவி, மகன்களுக்கு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ரசிகர்களுக்காக படத்தில் பாடலை தள்ளி வைத்த எம்.ஜி.ஆர்!.. அட இப்படியும் ஒரு நடிகரா?!…

எனவே, வெறும் கையோடுதான் எம்.ஜி.ஆரின் தாய் சத்யா இரண்டு மகன்களுடன் கும்பகோணத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் சந்தித்தது வறுமை மட்டுமே. குடும்பத்தில் பசியும், வறுமையும் தாண்டியமாடியதால் 7 வயதிலேயே எம்.ஜி.ஆரும், அவரின் அண்ணன் சக்கரபாணியும் நாடகங்களுக்கு நடிக்க சென்றனர்.

அதாவது, தன் பிள்ளைகள் நாடகத்தில் இருந்தால் அவர்களுக்கு மூன்று வேளை உணவும், உடுத்த உடையும் கிடைக்கும் என்பதால் சிறுவயதிலேயே அவர்களை நாடகத்திற்கு அனுப்பிவிட்டு சத்யா தனிமையில் வாழ்ந்தார். இப்படித்தான் எம்.ஜி.ஆரின் நடிப்பு கேரியர் துவங்கியது.

இதையும் படிங்க: ஒத்தைக்கு ஒத்தை மோதி பாக்கலாமா?!.. சவால் விட்ட நடிகர் திலகம்.. எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி…

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரை ‘டேய் முடிகாலா’ எனவே அவரின் அம்மா அழைப்பாராம். முடிகாலன் என்றால் ராசியில்லாதவன் என அர்த்தம். ‘உங்கள் மகனை ஏன் அப்படி அழைக்கிறீர்கள்?’ என யாராவது கேட்டால். இவன் பிறப்பதற்கு முன் நாங்கள் நல்ல வசதியுடன் வாழ்ந்தோம். இவன் பிறந்த பின்னரே ஒன்றும் இல்லமால் ஆகிவிட்டோம். இவன் ராசியில்லாதவன் என சொல்வாராம்.

ஆனால், அதே எம்.ஜி.ஆர் பின்னாளில் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதோடு, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top