Connect with us
mgr

Cinema History

செருப்பால் அடித்தவரை பழி தீர்த்த எம்.ஜி.ஆரின் தாய்!.. அதிர்ந்து போய் நின்ற எம்.ஜி.ஆர்!..

தனது படங்களில் “தாய் மீது ஆணை” என்று எம்.ஜி.ஆர் உண்ர்ச்சி பொங்க வசனம் பேசுவார். இப்படி தாய் பாசத்தை பிரதான படுத்தும் விதமாக தனது இறுதி படம் வரை நடித்து வந்திருப்பார். இவரது நிஜ வாழ்வில் இளம் வயதில் இவர் பட்ட கஷ்டங்கள் பற்றி அறிந்திருப்போம். இவரை இப்படி ஒரு இடத்திற்கு கொண்டு வர அவரது தாய் பட்ட அவஸ்தைகளையும், துன்பங்களையும் பற்றி அறிந்தால் பாறை மனதிலும் கண்ணீர் கசியத்துவங்கும்.

தனது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் எம்.ஜி.ஆர். அதில் நான்கு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். அதேபோல் எம்.ஜி.அரின் அவரின் சகோதரர் சக்கரபாணியும் சிறுவனாக இருக்கும் போதே தகப்பனாரும் மறைந்துவிட்டார். இருவரையும் வளர்த்து ஆளாக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் இவர்களது தாயார் சத்தியபாமா.

பொதுவாகவே எம்.ஜி.ஆர் எதையும் எதிர்கொள்ளும் திறன், முற்போக்கு சிந்தனை, தவறுகளை தட்டிக்கேட்கும் குணம், இளகிய மனம் கொண்டவராகத்தான் பார்க்கப்பட்டார். இப்படி இவரது குணம் இயற்கையாகவே அமைய இவரது தாயாரும் மிக பெரிய காரணம். கணவனை இழந்த பெண்ணாக தன் குழந்தைகளை வளர்க்க பல போரட்டங்களை சந்திதுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணதாசனை ஏற்க மறுத்த வாலி!.. முதலமைச்சர் நானா? நீங்களா?!.. எகிறிய எம்.ஜி.ஆர்!..

தனது தூரத்து உறவு சகோதரர் முறை கொண்ட வேலு நாயர் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்த பொழுது, இவருக்கு தங்கை முறை கொண்ட பெண் ஒருவரிடம் வீட்டு வேலைகள் செய்தாவது தனது மகன்களை வளர்க்கவேண்டும் என கவலையோடு அவர் கூற, அதற்கு பதில் நீங்கள் வீடு வீடாகச்சென்று பிச்சை எடுத்தால் வளர்ப்பது எளிதாக இருக்கும் என நக்கலாக கூறியிருக்கிறார் அந்த பெண்மணி.

sathya

இருவருக்குமிடையே நடந்த இந்த விவாதத்தை வேறு விதமாக வேலு நாயரிடம் தங்கை முறை கொண்ட பெண கூற, மது போதையிலிருந்த அவரோ சத்தியபாமவை கீழே கிடந்த செருப்பை எடுத்து தனது ஆத்திரம் தீரும் வரை அடித்திருக்கிறார். நான்கு வயது குழந்தையாக இருந்த எம்.ஜி.ஆரோ செய்வதறியாது பதறிப்போய் தனது தாயை சுற்றி, சுற்றி வந்துள்ளார். வேலு நாயரின் இத்தகைய கொடிய செயலால் கோபம் கொண்ட எம்.ஜி.ஆரின் தாயர் தனது மகன்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வேலு நாயரின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் எம்.ஜி.ஆரும், சக்கரபாணியும் நாடகத்தில் சேர்ந்துவிட்டனர்.

நாட்கள் செல்லச்செல்ல இருபது வயது இளைஞனாக வளர்ந்து விட்டார் எம்.ஜி.ஆர், இப்படி இருக்கையில் வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தங்கை முறை கொண்ட சத்திய பாமாவை சந்திக்க வந்துள்ளார் வேலு நாயர். அன்றும் மதுபோதையில் இருந்துள்ளார்.சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு நடந்த கொடுமையை மறக்காத சத்திய பாமா, தனக்கு அருகிலிருந்த செருப்பை எடுத்து வேலு நாயரை அடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

இப்பொழுதும் நடப்பதறியாது நின்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர் வேலு நாயரை தனது தாயாரின் அருகில் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அடிபட்ட வெறியோடு வீட்டை விட்டு வெளியே சென்ற வேலு நாயர் தன்னையே தாழ்வாக நினைத்து எதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என தாய் உள்ளத்தோடு யோசித்த சத்திய பாமா எம்.ஜி.ஆரை அழைத்து வேலு நாயர் அவரது வீட்டிற்கு செல்லும் வரை பின் தொடர சொல்லியிருக்கிறார்,

‘அடிக்கவும் செய்தீர்கள், அன்பும் காட்டுகிறீர்கள்.. இது தனக்கு புரியவில்லை’ என எம்.ஜி.ஆர் தாயாரை பார்த்து கேட்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சொல்ல, கண்கள் குளமாக நின்ற எம்.ஜி.ஆரோ ‘பின் எதற்கு அவர் மீது அக்கறை காட்டினீர்கள்?’ எனக்கேட்க, எனது பழைய கடனையும் தீர்த்தும் விட்டேன், எனது இயல்பு குணத்திலேயும் இருந்துவிட்டேன் இதுதான் நான்’ என்று கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top