எம்.ஜி.ஆர் நடித்து ரூ.350 கோடி வசூல் செய்த படம்!.. அப்பவே அசால்ட் பண்ணிய பொன்மன செம்மல்!..

by சிவா |   ( Updated:2023-07-28 14:58:54  )
mgr
X

நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். 30 வருடங்களுக்கும் மேல் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்து பெரிய ஆளுமையாக மாறினார். 1950,60 களில் இவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகவே எம்.ஜி.ஆர் இருந்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெறும் வாள் சண்டை 50களில் மிகவும் பிரபலம். அதன் மூலம்தான் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

mgr

1969ம் வருடம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு, அசோகன், பண்டரிபாய் என பலரும் நடித்து வெளியான திரைப்படம் அடிமைப்பெண். இந்த திரைப்படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஜெயலலிதா சொந்தக்குரலில் ஒரு பாடலும் பாடியிருந்தார். அதுதான் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடலாகும். இந்த படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.

இதையும் படிங்க: உனக்கு எதுக்கு இந்த வேலை!.. வேற எதாவது ட்ரை பண்ணு!.. கருணாநிதி மகனை எச்சரித்த எம்.ஜி.ஆர்!..

அப்படத்தில் இடம் பெற்ற அம்மா பாடலான ‘தாயில்லாமல் நானில்லை’ டி.எம்.சவுந்தரராஜனுக்கு புகழை தேடித்தந்தது. அதேநேரம் இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கும், சவுந்தரராஜனுக்கும் இடையே சம்பள பிரச்சனை எழுந்தது. அதேபோல், சந்திரபாபு எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசி படமும் இதுதான். 1961ம் வருடம் வெளியான ஒரு இத்தாலி படத்தை சுட்டுத்தான் இந்த படத்தை எம்.ஜி.ஆர் எடுத்தார்.

adimai pen

இந்த படமும் அப்போது ரூ.2 கோடியே 50 லட்சம் வரை வசூல் செய்ததாக சொல்கிறார்கள். அது உண்மையெனில், இன்றைய மதிப்பில் அது ரூ.350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பல கோடிகளில் உருவாகும் பட் 100 கோடி வசூல், 500 கோடி வசூல் என்றெல்லாம் பேசுகிறார்கள். இப்போது டிக்கெட் விலை ரூ.100 லிருந்து 250 வரை இருக்கிறது. ஆனால், அடிமைப்பெண் 50 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட படம் எனக்கூறப்படுகிறது. 1969ல் டிக்கெட் விலை 30 பைசாவிலிருந்து ஒரு ரூபாய் வரை இருந்தது என சொல்லலாம். அப்போதே ரூ.2.5 கோடி வரை வசூல் என்றால் பார்த்துகொள்ளுங்கள்!..

இதையும் படிங்க: ஐயம் சாரி.. நான் ரொம்ப பிஸி!.. எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த பத்மினி!.. காரணம் இதுதானாம்!

Next Story