சிவாஜி பட ஸ்டைலில் ஒரு எம்.ஜி.ஆர் படம்...ரிஸ்க் எடுத்த ஆர்.எம்.வீரப்பன்...ரிசல்ட் என்ன தெரியுமா?...
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன். இவர்களின் திரைப்படங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். எம்.ஜி.ஆர் படங்கள் பெரும்பாலும் சண்டைக்காட்சிகள், வசனங்கள் இதற்காகவே நல்ல வரவேற்பை பெறும்.
ஆனால் சிவாஜி படங்கள் சென்டிமெண்ட், பாசம், நடிப்பு இதற்காக பெரும் வரவேற்பை பெறும்.இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நாடகமன்ற நிர்வாகியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் முதன் முதலில் ஒரு தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்து அதன் மூலம் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என எண்ணினார். தெய்வத்தாய் என்ற படம் இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும். இதிம் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடித்திருப்பர்.
இதையும் படிங்க: விஜயின் நடிப்பில் ரீமேக்காகும் சத்யராஜின் மெகா ஹிட் படம்!..இயக்குனரே ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கோங்க!..
இந்த படத்தில் சில புதுமைகளை புகுத்த விரும்பிய வீரப்பன் சிவாஜி படங்களில் பின்பற்றி வந்த சில முறைகளை இந்த படத்திலும் புகுத்தினார். எப்போதும் எம்.ஜி.ஆர் படங்களை இயக்கும் இயக்குனர்களை தவிர்த்து சிவாஜியை இயக்கிய இளம் இயக்குனர்களை தேடினார். அப்போது அன்னை இல்லம் என்ற சிவாஜி படத்தை இயக்கி இருந்த பி.மாதவனை இயக்க செய்தார்.
அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர்களில் இருந்து பாடலாசிரியர் வரை அனைத்திலும் வித்தியாசத்தை கொண்டு வந்தார் வீரப்பன். மேலும் எம்.ஜி.ஆர் படங்கள் பெரும்பாலும் சண்டை காட்சிகளோடு இறுதியாக கதாநாயகி வரும் மாதிரியான காட்சிகளோடு முடியும். ஆனால் இதிலும் சிவாஜி படங்கள் மாதிரி கொஞ்சம் செண்டிமெண்டாக முடிக்க முடிவு செய்தார் வீரப்பன்.இந்த படம் வெளியான அதே நேரத்தில் தான் சிவாஜி நடித்த கைகொடுக்கும் தெய்வம் படமும் வெளியானது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.