எம்.ஜி.ஆருக்கு லைட்டிங் செய்த லைட் பாய்!.. பின்னாளில் இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர்…

Published on: July 8, 2023
mgr
---Advertisement---

நாடக அனுபவம்:

ஏழு வயது முதலே நாடகத்தில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் நடித்து அதன்பின்னரே சினிமாவுக்கு வந்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகருடன் வேலை பார்த்துள்ளார்.

mgr
mgr

சினிமாவை பொறுத்தவரை யாருடையை எதிர்காலம் எப்படி இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது. சின்ன சின்ன வேலையை செய்தவர் பின்னாளில் பெரிய நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக கூட மாறுவர்கள். ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் சிறு வயதில் திரையரங்கில் முறுக்கு விற்றவர். நடிகர் திலகம் சிவாஜி நாடகங்களில் பெண் வேடத்திலெல்லாம் நடித்தவர்.

mgr

மாயா மச்சிந்த்ரா:

இப்படி ஒவ்வொரு சினிமா பிரபலங்களுக்கும் ஒரு கதை உண்டு. சரி விஷயத்திற்கு வருவோம். மாயா மச்சிந்ரா எம்.ஜி.ஆர் நடிப்பில் 1939ம் வருடம் வெளியான திரைப்படம். இந்த படத்தில் அவருடன் மாஸ்டர் வினாயக், எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், சக்கரபாணி உள்ளிட பலரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: பராசக்தி படத்திலிருந்து தூக்கப்பட்ட சிவாஜி!.. அதுக்காக அவர் பட்ட கஷ்டம்!..

இப்படத்தின் சில காட்சிகள் கல்கத்தாவில் எடுக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் நடித்த காட்சியில் அவரின் முகத்தில் வெயில்படாமல் இருக்க ஒரு வெள்ளை துணியில் மறைத்து அந்த காட்சியை எடுத்தனர். அந்த வெள்ளை துணியை பிடித்திருந்த லைட்பாய் பின்னாளில் உலகம் போற்றும் இயக்குனராக இருந்தவர் என்றால் நம்ப முடிகிறதா?..

sathyajit ray

சத்யஜித்ரே:

அதுதான் உண்மை. அவர்தான் சத்யஜித்ரே. வங்காள மொழியில் பல சிறப்பான படங்களை இயக்கி இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர். முதலில் லைட்பாய், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இயக்குனர் என தன்னை வளர்த்து கொண்டவர். அதன்பின் பணக்கார குடும்பம் படத்தின் படப்பிடிப்புக்காக் எம்.ஜி.ஆர் கல்கத்தா சென்றிருந்த போது சத்யஜித்ரேவை நேரில் சந்தித்து அவர் இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தை பாராட்டி அவரிடம் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 கோடி மோசடி! அஜித்தை தொடர்ந்து ரம்பாவையும் வம்பில் மாட்டிவிட்ட தயாரிப்பாளர்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.