இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

USV-ETR
எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி என்று பார்ப்போமா...
நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, அரசிளங்குமரி, ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், நினைத்ததை முடிப்பவன், பட்டிக்காட்டு பொன்னையா என 17 படங்களில் எம்ஜிஆர் இரட்டை வேடம் போட்டு அசத்தியுள்ளார்.

Netru Indru Naalai
நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இரட்டை வேடப்படங்கள் மொத்தம் 21. அவை, உத்தமபுத்திரன், அன்னையின் ஆணை, சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கௌரவம், எங்கள் தங்க ராஜா, சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, பட்டாக்கத்தி பைரவன், எமனுக்கு எமன், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, தியாகி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, ரத்த பாசம்.

Gowravam
இவற்றில் உத்தமபுத்திரன், சரஸ்வதி சபதம், கௌரவம், எங்கள் தங்க ராஜா, என் மகன், விஸ்வரூபம், சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய 8 படங்கள் 100 நாள்களைக் கடந்து ஓடியவை.
இவற்றில் இருந்து நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எம்ஜிஆர் தான் வின்னர். அவர் 17 படங்களில் நடித்து விட்டு 9 படங்களை வெற்றிப்படமாக்கி உள்ளார். சிவாஜி 21 படங்களில் நடித்தும், 8 படங்களில் தான் சாதித்துள்ளார். அதனால் எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை இந்தப் படங்களில் இருந்து நாம் அறிய முடிகிறது.