எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இருந்த ஈகோ.. அவருடைய இறப்பிற்கு கூட சாமி போகலயே

by Rohini |   ( Updated:2025-04-01 03:22:24  )
mgr
X

mgr

Nambiar: முன்பெல்லாம் சோசியல் மீடியா இல்லாத காலம். அதனால் சினிமாவில் என்ன காட்டுகிறார்களோ அதுதான் உண்மை என மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதனால்தான் ஆரம்பகாலத்து நடிகர்கள் எங்களை மக்கள் அடிக்க வந்தார்கள், திட்டினார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்படித்தான் நம்பியாரையும் ஒரு கொடூரமான வில்லனாக மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள்.

திரையில் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் வாள் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நம்பியார் மீது கல்லைத் தூக்கி எறிந்த ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அந்தளவுக்கு நம்பியாரை ஒரு மோசமானவராகத்தான் மக்கள் பார்த்தார்கள். ஆனால் அதற்கு நேர் எதிரானவர் நம்பியார். எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாதவர். உண்மையான ஆன்மீகவாதி.

வருடந்தோறும் சபரிமலைக்கு மாலை போட்டு குருசாமியாக செல்லக் கூடியவர் நம்பியார். அவரை பின்பற்றி எத்தனையோ பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு போன கதையெல்லாம் இருக்கிறது. இந்த நிலையில் நம்பியாரின் பேரன் ஒருவர் அவருக்கும் எம்ஜிஆருக்கும் இருந்த உறவை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இருவருமே யோவ் யோவ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்களாம்.

எம்ஜிஆருக்கு அடிக்கடி ஈகோ பிரச்சினை எல்லாம் வந்து நம்பியார் கூட மூன்று மாதங்கள் பேசாமல் இருந்திருக்கிறாராம். அதன் பிறகு எம்ஜிஆரே தானாக வந்து பேசிவிடுவாராம். நம்பியார் ஒரு சில படங்களில் நடிக்கும் போது அந்தப் படத்தில் எதுக்கு நடிச்ச? ஏன் நடிச்ச இந்த மாதிரி ஈகோ பிரச்சினைதான் எம்ஜிஆருக்கு வருமாம். எம்ஜிஆர் இறக்கும் போது நம்பியார் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தாராம்.

nambiar

இவர் பூஜையில் இருக்கும் போது அந்த செய்தி வந்திருக்கிறது. அதனால் பஜனை முடியட்டும் என நம்பியாரின் மனைவி காத்திருக்க அதன் பிறகுதான் அண்ணன் இறந்துட்டாரு என நம்பியாரின் மனைவி சொல்லியிருக்கிறார். இதை கேட்டதும் நம்பியார் அதிர்ச்சியாகி இரண்டு நாள்கள் தண்ணீர் குடிக்காமல் சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் ஒரு அறையிலேயே இருந்தாராம். ஆனால் அவர் இறப்பிற்கு செல்லவில்லையாம்.

ஏனெனில் மாலை போட்டிருந்ததனால் நான் மாலை கழட்டி விட்டால் எல்லாருமே கழட்டி விடுவார்கள் என்ற காரணத்தினால் சபரிமலை எல்லாம் போய்விட்டு இரண்டு நாள்கள் கழித்து எம்ஜிஆர் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லி வந்தாராம் நம்பியார்.

Next Story