எனக்கு பேர் வச்சதே எம்ஜிஆர் தான்.. சண்டை போட்டு பேட்டி எடுத்தேன் -நடிகை லதா சொன்ன சுவாரசிய தகவல்..

by prabhanjani |
latha
X

பழம்பெரும் நடிகை லதா, எம்ஜிஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், நாளை நமதே, நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள் என ஏராளமான ஹிட் படங்களில் இவர்கள் நடித்துள்ளனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை லதா, எம்ஜிஆர் பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

lattha

அதில் தன்னுடைய இயற்பெயர் நளினி தான் என்றும் எம்ஜிஆர் தான் தனக்கு லதா என்று பெயர் வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார். எதற்காக லதா என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டேன். வாயில் நுழையும் படி, குட்டியான பெயர் லதா. அதனால் வைத்தேன் என்று பதிலளித்தார். எனக்கு நளினியை விட லதா என்ற பெயர் தான் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, பல செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நான் தான் முதலில் பேட்டி எடுப்பேன் என்று திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டேன். சரி, முதல் பேட்டி உனக்கு தான என்று அவரும் கூறிவிட்டார்.

mgr latha

அந்த பேட்டி தொடங்குவதற்கு முன்பே, எசக்கு பிசக்காக ஏதேனும் கேள்வி கேட்டால், சம்பேஸ்தானு என்று விளையாட்டாக மிரட்டிவிட்டு தான் அந்த பேட்டியை தொடங்கினார். அந்த பேட்டியில் அரசியலுக்கு வந்த பிறகு மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டேன்.

latha mgr

அதற்கு அவர் ஒரு 6 மாதம் கழித்து வா, அப்போது நீயே சொல்வாய் நான் அரசியலுக்கு வந்து என்ன செய்தேன் என்று.. என பதிலளித்தார். ஜெயலலிதாவிற்கும், எம்ஜிஆருக்கும் இடையே சண்டை வந்தால், இருவரும் சரியாக பேசிக்கொள்ளாமல் இருந்தால் நான் அதில் தலையிட மாட்டேன். இருவரிடமும் நான் நட்பாக பழகிவருவேன். அவர்களின் பிரச்சனைக்குள் நான போகவே மாட்டேன் என்று நடிகை லதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- நயன்தாரா கல்யாணத்திற்கு காரணம் அட்லீயா? பயத்தில் விக்னேஷ் சிவன் போட்ட டீல்- பிரபலம் சொன்ன பகீர் தகவல்..

Next Story