Cinema History
ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..
Mgr Jayalalitha: எம்.ஜி.ஆருடன் அதிகம் ஜோடி போட்டு நடித்தவர்கள் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும் மட்டும்தான். இதில் ஜெயலலிதாவை விட சரோஜாதேவி எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு ஏத்த நடிகை அமைவது என்பது சுலபமில்லை. இப்போது போல் 50,60 களில் அதிக நடிகைகள் கிடையாது.
இப்போதெல்லாம் ஒரு நடிகர் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது நடிகையுடன் ஜோடி போட்டு டூயட் பாடுகிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் அப்படி இல்லை. முன்னணி கதாநாயகிகள் மிகவும் குறைவு. சாவித்ரி, பத்மினி, ஜெயலலிதா, சரோஜா தேவி, தேவிகா, காஞ்சனா என மிகவும் சொற்பமான நடிகைகளே இருந்தனர்.
இதையும் படிங்க: யாரென சொல்லாமல் பெண்ணுடன் போனில் பேசிய எம்.ஜி.ஆர்… கடைசில அந்த பெண்ணுக்கு என்ன செஞ்சாரு தெரியுமா?…
அதனால்தான் எம்ஜி.ஆர் சரோஜாதேவியுடனும், ஜெயலலிதாவுடனும் தொடர்ந்து படங்களில் நடித்தார். அதேபோல், சிவாஜி பத்மினியுடன் அதிக படங்களில் நடித்தார். ஜெமினியோ சாவித்ரியுடன் அதிக படங்களில் நடித்தார். அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு. தான் கஷ்டப்படும்போது உதவிய பலரையும் அவர் வளர்ந்த பின் மேலே தூக்கிவிட்டார். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரை தயாரிப்பாளர் ஆக்கியதும் அப்படித்தான். 1961ம் வருடம் இத்தாலி மொழியில் வெளியான ‘Hercules and the captive women’ என்கிற திரைப்படத்தை தழுவி ஒரு கதையை உருவாக்கினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அந்த விஷயத்துல கொடுத்து வச்சவரு..! பிரபல தயாரிப்பாளரிடம் புலம்பிய சிவாஜி கணேசன்..!
அதில், சரோஜாதேவி மற்றும் கே.ஆர்.விஜயா என இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைப்பது என முடிவு செய்தார். எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஜெயலலிதாவை அவர் மறக்கவில்லை.
அதற்கு கைமாறு செய்யும் விதமாக ஜெயலலிதாவின் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த படத்தின் 2 கதாபாத்திரங்களிலும் அவரையே நடிக்க வைத்தார். இப்படி உருவான திரைப்படம்தான் அடிமைப்பெண். இந்த படத்தில் ஜெயலலிதாவை சொந்த குரலில் ஒரு பாடலையும் பாடவைத்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்த இப்படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கலைஞர் வசனத்தால் தோல்வி அடைந்த எம்.ஜி.ஆர் படம்… ரூட்டை மாற்றியிய பொன்மன செம்மல்!..