“அந்த இயக்குனரின் பெயர் மிஸ்ஸிங்”… விருது வழங்கும் விழாவுக்கே வர மறுத்த எம்.ஜி.ஆர்… யாரா இருக்கும்??
பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர், மக்கள் திலகம் என்று பல பெயர்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர், தனது முன்னோடிகளுக்கு என்றுமே மதிப்பளிக்கக் கூடிய பண்பு கொண்டவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவரை நினைவில் வைத்து அவருக்கு நன்றிக்கடன் ஆற்றிய ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்ட போது தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களுக்கு விருது அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் அவரை சென்று சந்தித்தனர்.
அங்கே எம்.ஜி.ஆர் யார் யாருக்கெல்லாம் விருது வழங்க உள்ளார்கள் என்ற பட்டியலை பார்த்துவிட்டு “முக்கியமான தயாரிப்பாளர் ஒருத்தரை விட்டுட்டீங்களே!” என்று கூறினார் அவர். அதை கேட்ட நிர்வாகிகள் “யார் அந்த தயாரிப்பாளர்?” என அவர்களுக்குள்ளே யோசிக்கத் தொடங்கினர்.
அப்போது எம்.ஜி.ஆர் “குமாரி திரைப்படத்தை தயாரித்த பத்மநாபனை விட்டுவிட்டீர்களே. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர் அவர். அவரை விட்டுவிட்டீர்களே இது நியாயமா?” என்று கேட்டார். மேலும் “விருது வழங்கும் பட்டியலில் பத்மநாபனின் பெயரும் இடம்பெறவேண்டும். அவரிடம் சென்று அதற்கான ஒப்புதலை வாங்கிவிட்டு, அதன் பின் என்னை வந்து சந்தியுங்கள். அப்போதுதான் நான் விருது வழங்கும் விழாவிற்கு வர சம்மதிப்பேன்” எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சீரியஸான சீனை கலாய்த்த ரசிகர்கள்.. தியேட்டரை விட்டு ஓடிய இயக்குனர்… ஆனா அங்கதான் டிவிஸ்டு…
அதன் படி அடுத்த நாள் அந்த நிர்வாகிகள் பத்மநாபனை சென்று சந்தித்து, அவருக்கு விருது வழங்குவதாக கூறி அவரிடம் ஒப்புதலையும் வாங்கிவிட்டு மீண்டும் எம்.ஜி.ஆரை சந்திக்க வந்தார்கள். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டாராம்.