கமல் செய்த வேலையில் கடுப்பாகி பல மாதங்கள் பேசாமல் இருந்த எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!...

by சிவா |   ( Updated:2023-05-07 04:47:34  )
kamal
X

kamal

இளம் வயதில் நடிகர் கமல் திரைத்துறையில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் பெரிய நடிகராக இருந்தார். ஒருகட்டத்தில் அவர் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். கமல் நடிக்கும் படங்களை பார்த்து அவர் மீது அன்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். கமல் ‘சகலகலா வல்லவன்’ படம் நடித்தபோது ‘இதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். நீ வேறு எதாவது செய்’ என கமலுக்கு அறிவுரை சொன்னவர் எம்.ஜி.ஆர்.

அதேபோல் ஒருமுறை கமலிடம் ‘நீ நடித்த படங்களை பார்க்க என்னை கூப்பிடுவது இல்லையே’ என எம்.ஜி.ஆர் கேட்க அதற்கு கமல் ‘நல்ல படம் எடுக்கும்போது உங்களை பார்க்க அழைக்கிறேன்’ என சொல்ல அதற்கு எம்.ஜி.ஆர் ‘ஓ நீ நல்லா இல்லாத படங்களில் கூட நடிக்கிறியா?’ என கிண்டலடித்தவர்.

kamal

டி.என்.பாலு இயக்கத்தில் கமல் நடித்து 1978ம் வருடம் வெளியான திரைப்படம் சட்டம் என் கையில். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கமல் நடித்து 100 நாட்கள் ஓடிய முதல் படம் இதுதான். அதனால், இப்படத்திற்கு விழா எடுக்கப்பட்டது.

kamal

kamal

ஆனால், அப்படத்தின் இயக்குனர் டி.என்.பாலு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். எனவே, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து இந்த விழாவில் மட்டும் கலந்து கொள்ள டி.என்.பாலுவுக்கு அனுமதி தரவேண்டும் என கமல் கோரிக்கை வைக்க எம்.ஜி.ஆரும் அதை ஏற்றுக்கொண்டார். அதன்படி சிறையிலிருந்து ஒரு நாள் பரோலில் டி.என்.பாலு வெளியே வந்து அந்த விழாவிலும் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால், விழா முடிந்ததும் டி.என்.பாலு பெங்களூருக்கு தப்பி சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் கமலிடம் ஆறு மாதங்கள் பேசவே இல்லையாம்.

Next Story