மனோரமா மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர்!.. காதல் தோல்வியில் நடந்தது என்ன தெரியுமா?..
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நடிகை மனோரமா. ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த மனோரமா வெள்ளித்திரையில் தன் திறமையால் நுழைந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதுவரை மனோரமா அடைந்த புகழை எந்த ஒரு நகைச்சுவை நடிகையும் பெறவில்லை என்பது தான் உண்மை.
மனோரமா தன் தாயின் மீது அலாதி பிரியம் கொண்டவர். மேலும் சொந்த வாழ்க்கையில் சில பல பிரச்சினைகளால் கணவரை விட்டு பிரிந்து தன் தாயுடன் தான் நீண்ட நாள்கள் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரே ஒரு மகன்.
இதையும் படிங்க : சிக்குனா சும்மா இருப்போமா?.. விஜய் ரசிகர்களால் ‘துணிவு’ படக்குழு டோட்டல் அப்செட்!..
இந்த நிலையில் மனோரமா தன் மகனால் பெரும் சோகத்திற்கு ஆளாகியிருக்கிறார். அந்த காலத்தில் ஒரு பிராமண எழுத்தாளர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராம். அந்த எழுத்தாளரின் மனைவியின் தங்கையை மனோரமா மகன் காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்துள்ளாராம்.
இதை அறிந்த அந்த எழுத்தாளர் கோபப்பட்டு நேராக எம்ஜிஆரிடம் சென்று விஷயத்தை தெரிவித்து ‘எங்கள் குடும்பத்திற்கு இது சரிவராது. நீங்கள் தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ’ என்று சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரும் மனோரமாவையும் அவருடைய மகனையும் அழைத்து கண்டித்திருக்கிறார்.
மனோரமாவிடமும் உன் மகனை அடங்கி இருக்க சொல் என்றும் கூறியிருக்கிறார். அதே வேளையில் அந்த எழுத்தாளரிடமும் எவ்வளவு சீக்கிரம் உன் மனைவியின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்து. அது தான் நல்லது. ஏனெனில் காளையை நீண்ட நாள் அடக்க முடியாது என்று மனோரமாவின் மகனை பற்றி நாசுக்காக சொல்லி கூறியிருக்கிறார்.
அந்த எழுத்தாளரும் அமெரிக்கா மாப்பிள்ளையாக பார்த்து அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்த பக்கம் மனோரமாவின் மகன் துக்கத்தால் குடிக்கு அடிமையாகி விட்டார். மேலும் மனோரமா பிரபல கதாசிரியர் கலைஞானத்திடம் ‘அண்ணே எப்படியாவது எங்கள் ஜாதியில் ஒரு பெண்ணை பார்த்து என் மகனுக்கு நீங்கள் தான் கல்யாணத்தை நடத்திவைக்க வேண்டும்’ என மண்டாடியிருக்கிறார். இந்த தகவலை கலைஞானமே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.