போட்ட எந்த மெட்டும் பிடிக்கவில்லை!.. 53 வது மெட்டில் ஓகே பண்ண எம்ஜிஆர்!.. எந்த பாடல் தெரியுமா?..

by Rohini |
mgr_main_cine
X

mgr

தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கத்தக்க நடிகராக வலம் வந்த எம்ஜிஆர் பொன்மனச்செம்மல் என்றும் புரட்சித்தலைவர் என்றும் மக்கள் திலகம் என்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். இவர் தான் வருங்காலத்தில் தம்மை ஆளப்போகிறார் என்று மக்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ அவர் மேல் அலாதி அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.

mgr1

mgr1

அதே அளவுக்கு எம்ஜிஆரும் ரசிகர் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். மக்களுக்கு என்ன கருத்துக்களை சொல்ல வேண்டுமோ அதனை தன் பாடல்களின் மூலம் சொல்லி மக்களுக்கு புரிய வைப்பார் எம்ஜிஆர். அதற்காக தான் நடிக்கும் எந்த படங்களானாலும் அதில் அமைந்த பாடல்களை எம்ஜிஆர் ஒகே செய்த பிறகு தான் படங்களில் சேர்ப்பர் இயக்குனர்கள்.

இதையும் படிங்க : நடுராத்திரியில் ஒரு அமானுஷ்யம்… வடிவேலுவை நோக்கி நடந்து வந்த வெள்ளை உருவம்… கேட்கவே பயங்கரமா இருக்கே!!

அந்த வகையில் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படம். 1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தை எம்ஜிஆரே தயாரித்து வெளியிட்டார். கே.சங்கர் இயக்கத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் தான் அடிமைப்பெண்.

mgr2

mgr2

படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இந்த படத்தின் படப்பிற்காக எம்ஜிஆர் ஜெய்ப்பூர் சென்ற போது வெள்ளைத்தொப்பியை வாங்கி அணிந்தார். அது பிடித்துப்போகவே அதிலிருந்து தன் இறுதிக்காலம் வரை அந்த தொப்பியுடனேயே இருந்தார்.

இதையும் படிங்க : விஜயின் மெத்தனமான பேச்சு!.. சைலன்டா இருந்து பதிலடி கொடுத்த அஜித்!.. நாளுக்கு நாள் வலுக்கும் போட்டி..

படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும் குறிப்பாக தாயில்லாமல் நான் இல்லை பாடல் மிகவும் பிரம்மாதமாக இருக்கும். அந்த பாடலுக்கு இசையமைக்க முதலில் கேவிஎம் நிறைய மெட்டுக்களை போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் அது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லையாம்.

mgr3

mgr3

கிட்டத்தட்ட 52 மெட்டுக்கள் போட்டும் 53வது மெட்டில் தான் எம்ஜிஆர் ஓகெ பண்ணியிருக்கிறார். அதன் மூலம் அமைந்ததே தாயில்லாமல் நானில்லை பாடல். இந்த தகவலில் இருந்து எம்ஜிஆரின் இசைஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Next Story