ஆள விடுங்கடா சாமி!..தப்பிக்க நினைத்த இயக்குனரை உடும்பு பிடியாக பிடித்த எம்ஜிஆர்!..
தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருந்து மக்களை ரசிக்க வைத்தவர்கள் நடிகர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன். இந்த இருபெரும் ஜாம்பவான்களையு ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்பை முதன் முதலில் பெற்றவர் இயக்குனர் கே.சங்கர்.
பணத்தோட்டம் மற்றும் ஆலயமணி ஆகிய இருபடங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி அதில் வெற்றியும் பெற்றார். நல்லவன் வாழ்வான் படத்தின் மூலம் இயக்குனர் நீலகண்டன் மூலம் எம்ஜிஆருடன் அறிமுகம் ஆன கே.சங்கர் அதிலிருந்து எம்ஜிஆருடன் நல்ல நெருக்கம் காட்டினார். எம்ஜிஆருக்கும் கே. சங்கரை மிகவும் பிடித்து போனது.
இதையும் படிங்க : 32 வருடங்களைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் கிழக்கு வாசல் – ஒரு பார்வை
இதன் மூலம் எம்ஜிஆரை இயக்கும் வாய்ப்பு கே.சங்கருக்கு ஏற்பட்டது. ஆனால் எம்ஜிஆரை வைத்து இயக்குவது என்பது கே.சங்கருக்கு ஒரு சவாலாகவே இருந்தது. அந்த நேரத்தில் தான் சிவாஜியின் ஆலயமணி படத்தையும் சங்கர் இயக்கி கொண்டிருந்தார்.அவரிடம் எம்ஜிஆர் வைத்து படம் எடுப்பது தொடர்பாக பலபேர் பேசியும் சங்கருக்கு உடன்பாடு ஏற்படவில்லையாம். காரணம் மனதில் ஒரு பக்கம் பயம். என்னவெனில் எம்ஜிஆரின் படமாகவெ மாறிவிடும், நாம் நினைப்பது நடக்காது என்ற எண்ணம் தான்.
இதையும் படிங்க : லோ ஆங்கிள் சும்மா அதிருது!…ஒரே செல்பியில் மொத்தமும் காட்டிய பூனம் பாஜ்வா!..
இதை அறிந்த எம்ஜிஆர் சங்கரை ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து ‘என்ன உங்களுக்கு பிரச்சினை? 18 நாள்கள் கால்ஷீட் தருகிறேன். இந்த படத்தை நீங்கள் தான் பண்ணனும்’ என சொல்லியிருக்கிறார். ஆனாலும் துளிகூட விருப்பமில்லாத சங்கர் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிடலாம் என்று நினைத்த போது எம்ஜிஆரே கதையை வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றாற் போல எடுங்கள், நான் எதிலும் தலையிட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். இதை கேட்ட போது சங்கருக்கு எம்ஜிஆர் மீதான அன்பு அதிகமாக அவரை வைத்து படம் எடுக்கலாம் என்று ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இதன் மூலம் வந்த படம் தான் பணத்தோட்டம். அந்த பக்கம் சிவாஜியின் ஆலயமணி. இரண்டு படங்களும் செம ஹிட்.