எம்ஜிஆரை எக்குத்தப்பா போட்டோ எடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்!.. பொங்கி எழுந்த ஆர்.எம்.வீரப்பன்...
80களிலும் சரி 90களிலும் சரி இன்றளவும் நாம் பார்த்து வியக்குற பல புகைப்படங்களுக்குச் சொந்தக்காரராக விளங்குபவர் ஸ்டில்ஸ் ரவி. இவருக்கு குருவாக இருந்தவர் ஆனந்த விகடனில் போட்டோகிராபராக இருந்த சுபாஷ் சுந்தரம் என்பவர். ஸ்டில்ஸ் ரவி பத்திரிக்கை புகைப்படக்காரராக இருந்து அதன் பின் சினிமாவில் புகைப்படக் கலைஞராக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் அனைத்து பிரபலங்களுல் விரும்பத்தக்க புகைப்படக் கலைஞராக இருந்தவர் ரவி. ராதிகா, பானுப்பிரியா போன்ற முன்னனி நடிகைகள் புதியதாக காஸ்ட்யூம் பயன்படுத்தி நன்றாக இருந்தால் உடனே ஸ்டில்ஸ் ரவியை தான் அழைப்பார்களாம். இன்று ஆடை மிகவும் நன்றாக இருக்கிறது, வந்து புகைப்படம் எடுங்கள் என்று இவரை தான் அழைப்பார்களாம்.
அந்த அளவுக்கு அனைவருக்கும் பரீட்சையமாக இருந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவின் அன்பிற்கினிய போட்டோகிராபராகவே மாறியிருக்கிறார் ரவி. இப்படி இருக்க எம்ஜிஆர் நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இதயக்கனி’.
இதையும் படிங்க : “விஜய்யை என்னால மட்டுந்தான் விமர்சிக்க முடியும்”… பொதுவிழாவில் வாய்விட்டு சிக்கிய பிரபல இசையமைப்பாளர்…
இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ராதா சலுஜா நடித்திருந்தார். மேலும் பண்டரி பாய்,மனோகர், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடிக்க படம் நல்ல வெற்றி பெற்றது. ஒரு சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.
அந்த கூட்டத்தில் ஸ்டில்ஸ் ரவியும் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் எம்ஜிஆர் சூட்டிங்கில் இருந்திருக்கிறார். எப்பொழுதுமே புகைப்படம் எடுப்பதற்கு என்று ஒரு நேரம் ஒதுக்குவார்கள். படப்பிடிப்பு சமயத்தில் அனுமதி இல்லையாம். ஆனால் ஸ்டில்ஸ் ரவி ஒரு ஓரமாக இருந்து படப்பிடிப்பு நடந்ததை போட்டோ எடுத்திருக்கிறார்.
அதுவும் ஒரு காட்சியில் எம்ஜிஆர் நடிகை ராதா சலுஜாவின் சேலையை பிடித்து இழுக்குற காட்சியை ரவி போட்டோ எடுத்து விட்டார். அந்த போட்டோவை தனது குருவான சுபாஷ் சுந்தரத்திடம் காட்ட அவர் உடனே பத்திரிக்கையில் போட்டுவிட்டாராம். அந்த நேரத்தில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்ததாம்.
இந்த செய்தியை அறிந்த ஆர்.எம்.வீரப்பன் சுபாஷ் சுந்தரத்தை தொலைபேசியில் அழைத்து சகட்டு மானக்கி திட்டி பெரிய வாக்குவாதமே வந்து விட்டதாம். அதன் பிறகு எப்படியோ சமாளித்து நிலைமையை சரிசெய்திருக்கின்றனர். இந்த செய்தியை ஸ்டில்ஸ் ரவி ஒரு பேட்டியின் போது கூறினார்.