Connect with us
MGR, Kamal

Cinema History

கமலை வைத்து எம்ஜிஆர் போட்ட மெகா திட்டம்… அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமா?

உலகநாயகன் கமல் பற்றி சிலாகித்துப் பேசாத திரையுலகக் கலைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் விளங்கக் காரணம் அவரது அபார உழைப்பு தான். அது இன்று வரை தொடர்வது தான் ஆச்சரியம். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கமலைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கமலுடன் உணர்ச்சிகள் படம் உருவான காலகட்டத்தில் இருந்தே அவருடன் நட்பு இருக்கு. கமலைப் பொருத்த வரை அவர் பல ‘பத்திரிகையாளர்களுடைய வேடந்தாங்கல்’ என்றே சொல்லலாம். கமலின் பல படங்களுக்குப் பத்திரிகை தொடர்பாளராக இருந்துருக்கேன்.

இதையும் படிங்க… ஒரு கோடி கொடுத்தும் சம்மதிக்காத ரஜினி!.. மனுஷனுக்கு இப்படி ஒரு கொள்கையா?!…

அவர் எப்போதுமே எனக்கு ஆச்சரியம் தான். ஒவ்வொரு படத்திலும் அவர் ஒரு அதிசயத்தை வைத்துக் கொண்டே இருக்கிறார். அது இன்று வரை தொடர்கிறது. கமலுக்கும் சரி. நாகேஷூக்கும் சரி. படப்பிடிப்பு தளம் தான் அவர்களுக்கு வீடு.

கமலைப்பொருத்தவரை அவரோட ஆளவந்தான் வசனத்தை மாதிரி தான். எம்ஜிஆர் பாதி. சிவாஜி பாதி சேர்ந்து செய்த கலவை தான் கமல்ஹாசன். சிவாஜி, எம்ஜிஆர் என இருவரின் குருகுலத்திலும் அவர் இருந்தவர்.

சினிமாவிற்கு அடி எடுத்து வைத்த காலகட்டத்திலேயே அவர்களுடன் இருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிவாஜியின் வாயாலேயே எனக்கு அடுத்த வாரிசு என்ற பாராட்டைப் பெற்றவர் கமல். எம்ஜிஆருக்கும் கமல் மேல் மிகுந்த அன்பு உண்டு.

இதையும் படிங்க… மருமகனிடம் பிடித்த விஷயங்கள் இவ்வளவு இருக்கா..? பட்டியல் போடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

எம்ஜிஆர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படம் பொன்னியின் செல்வன். ஆனால் அது நடக்காமல் போனதால் எம்ஜிஆர் தான் தயாரிக்க வந்தியத்தேவன் கேரக்டரில் கமலை நடிக்க வைக்கலாம்னு நினைச்சாராம்.

குந்தவையாக ஸ்ரீதேவியை நடிக்க வைப்பது எனவும், பாரதிராஜா இயக்கத்தில் உருவாக்க வேண்டும் என்றும் எம்ஜிஆருக்கு திட்டம் இருந்ததாம். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top