தமிழக மக்களின் புரட்சித் தலைவராக திகழ்ந்த எம்.ஜி.ஆர், “நாடோடி மன்னன்”, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”, “உலகம் சுற்றும் வாலிபன்” ஆகிய திரைப்படங்களை இயக்கி அதில் நடித்தும் உள்ளார்.
தற்போது பேன் இந்திய திரைப்படங்கள் மிக சர்வ சாதாரணமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் வேற லெவலில் ஒரு பேன் வேர்ல்டு திரைப்படத்தை தயாரிக்க பிளான் போட்டிருக்கிறார். அத்திரைப்படத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனையும், பிரபல ஹாலிவுட் நடிகரான மைக்கில் கைனேவையும் இணைத்து, ஒரு படத்தை உருவாக்க வேண்டும் எனவும் அதில் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டிருந்தாராம். இத்திரைப்படத்திற்கு “கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு” என்று டைட்டிலும் வைத்தாராம்.
இத்திரைப்படத்தை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலே வெளியிட திட்டமிட்டிருந்தாராம் எம்.ஜி.ஆர். அந்த படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக மொரிசியஸ் போன்ற பல நாடுகளுக்கு எம்.ஜி.ஆர் சென்றாராம்.
ஆனால் இந்த பிரம்மாண்ட முயற்சியை எம்.ஜி.ஆர் ஒரு காலகட்டத்தில் கைவிட்டுவிட்டார். எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய காரணத்தால் இந்த பிரம்மாண்ட திரைப்படம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: சிம்பு இந்த இயக்குனருடன் இணைந்தால் இன்னும் டாப்ல வருவார்… பிரபல தயாரிப்பாளர் கொடுத்த டிப்ஸ்…
இதே போல்தான் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக இயக்க முடிவு செய்தார். மேலும் அதில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் இருந்தது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை இயக்க பல முயற்சிகளை மேற்கொண்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தை அவரால் இயக்க முடியவில்லை.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…