தலைவரே நீங்கள் செய்யாததையா செஞ்சிட்டாரு? முத்தக் காட்சியில் புகுந்து விளையாடிய கமலை பந்தாடிய எம்ஜிஆர்
சினிமாவைப் பற்றி பேச ஆரம்பித்தால் அதில் கமல் இல்லாமல் இருக்க மாட்டார். சினிமாவில் ஒரு பாதி அங்கமாகவே கமல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். சினிமா, நடிப்பு இவை மட்டுமே தன்னுடைய இரு கண்களாக நினைத்துக் கொண்டு வருகிறார் கமல். சினிமாவைப் பற்றி வேற என்ன புதியதாக செய்யலாம் என்பதையே கருத்தில் கொண்டு அதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.
களத்தூர் கண்ணம்மாவில் பெரிய ஜாம்பவான்களான ஜெமினி, சாவித்திரி இவர்கள் இருந்த போதும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் தன்னுடைய நடிப்பால் ஈர்த்தவர் கமல். அதிலும் குறிப்பாக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற அந்த ஒரு பாடல் மூலம் அனைவரையும் தன் கைக்குள் அடக்கியவர். அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
இதையும் படிங்க : இந்த அநியாயம் பண்றீங்களேடா!.. விஷயம் புரியாம வச்ச ‘மாமன்னன்’ கவர் போட்டோவை ரிமூவ் பண்ண ஃபகத் பாசில்!..
அதன் விளைவாகத்தான் அடுத்தடுத்த படங்களில் காட்சிகள் இல்லை என்றாலும் சும்மாவாவது கமலை பல தயாரிப்பாளர்கள் நடிக்க வைத்தார்கள். இப்படி சிறு வயதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரேடியாக கவர்ந்தார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கமலை பற்றி பல விமர்சனங்கள் முன்வந்தன. ஹாலிவுட் படத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் அதிகமாக நடிப்பது கமல் என்பதைப் போல சர்ச்சைகள் கிளம்பின.
அதே போல தான் அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் முத்தக்காட்சி இல்லாமல் எந்த படமுமே வெளிவந்திருக்காது. அதன் காரணமாகவே 80களில் உள்ள நடிகைகள் கமலுடன் நடிக்கவே தயங்கினார்கள். சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் முத்தக்காட்சி இடம்பெற்று இருந்தது.
அந்தப் படத்தை இயக்கியவர் டி என் பாலு. அந்த நேரத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த சமயம். ஏற்கனவே எம்ஜிஆருக்கும் டிஎன் பாலுவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாம். குறிப்பாக எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனபோது அண்ணா சாலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு இருந்ததாம்.
அப்போது டிஎன் பாலு 'ஓடி விளையாடு தாத்தா’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து பிரமோஷனுக்காக அதே அண்ணா சிலையின் பின் பக்கம் அந்த படத்திற்கான போஸ்டரை ஒட்டி இருந்தாராம். ஒரு பக்கம் எம்ஜிஆர் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க அவருக்கு எதிரே இந்த மாதிரி ஓடி விளையாடு தாத்தா என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு கடும் கோபம் கொண்டாராம்.
இதன் விளைவு தான் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் அந்த முத்த காட்சியை நீக்கியே தீர வேண்டும் என ஒத்த காலில் நின்னாராம் எம்ஜிஆர். அதற்காக போராட்டமும் நடத்தினாராம். இந்த சுவாரஸ்ய தகவலை கூறிய காந்தராஜ் மேலும் ஒரு முக்கியமான தகவலையும் பகிர்ந்தார். ‘இதயக்கனி படத்தில் எம்ஜிஆர் செய்யாத சேட்டையா ?அந்த படத்தில் இதழும் இதழும் என்ற ஒரு பாடல் வரும்.
இதையும் படிங்க : மீண்டும் பைக்கை எடுத்த அஜித்!.. விடாமுயற்சி இப்ப இல்லையா?!.. தீயாக வைரலாகும் செல்பி புகைப்படம்!…
அந்தப் பாடலை கேட்டால் அவ்வளவு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும். இதுவரை அந்த மாதிரி ஒரு ஆபாசமான பாடலை யாரும் எடுத்திருக்க முடியாது. எடுக்கவும் முடியாது. இப்படி இருந்த எம்ஜிஆர் கமல் இந்த முத்தக் காட்சியில் நடிக்க கூடாது என போராட்டம் செய்தார். ஆனால் இது கமல் மீது இருந்த தனிப்பட்ட கோபம் கிடையாது. பாலு மீது இருந்த கோபம்’ தான் கூறினார்.