More
Categories: Cinema History Cinema News latest news

ஒரு பாட்டுக்கு நடனமாட ஒரு மாதம் பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்!.. தலைகுணிந்து வணங்கிய நடிகை…

Actor MGR: தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் என்றால் அது நம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்தான். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் ஆளுமையாக இருந்தவர். மக்கள் நலனே தன் நலம் என்று இருந்தவர் எம்ஜிஆர். இல்லாதோருக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல் எம்ஜிஆர். அதன் காரணமாகவே அரசியலிலும் எம்ஜிஆரால் ஜெயிக்க முடிந்தது.

ஏகப்பட்ட படங்களில் எம்ஜிஆர் நடித்திருந்தாலும் அவரை மிகவும் பாராட்ட வைத்த படம் என்றால் குடியிருந்த கோயில்தான். இதை பற்றி பத்திரிக்கையாளர் சுரா ஒரு பேட்டியில் கூறினார். அதாவது சரவணா ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் குடியிருந்த கோயில். வேலுமணிதான் இந்தப் படத்தை தயாரித்தார். கே.சங்கர் படத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: இந்த ஆங்கரை நியாபகம் இருக்கா? புதிய அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்த ஆதம்ஸ்.. நீங்களுமா?

வேலுமணி சிவாஜியை வைத்து ஆண்டவன் கட்டளை போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். குடியிருந்த கோயில் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா மற்றும் ராஜஸ்ரீ ஆகிய இரு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள்.

படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ என்ற பாடல் இன்றுவரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான பாடலாகும்.

இந்தப் பாடலில் எல்.விஜயலட்சுமி எம்ஜிஆருடன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார். நடனத்திற்கு பேர் போன எல். விஜயலட்சுமி ஜெய்சங்கருடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடியிருப்பார். விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்பதற்காக இந்த பாடலில் நன்றாக ஆட வேண்டும் என எம்ஜிஆர் நினைத்தாராம்.

இதையும் படிங்க: எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்…

அதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் பயிற்சி எடுத்தாராம். அந்தப் பாடலை இப்பொழுது பார்த்தால் கூட எம்ஜிஆர் மிகவும் கஷ்டப்பட்டு நன்றாக ஆடியிருப்பார். அதிலும் விஜயலட்சுமிக்கு நிகராக நடனம் ஆடியிருப்பார். அதனால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார் எம்ஜிஆர். மேலும் எம்ஜிஆர் ஆடி முடித்ததும் விஜயலட்சுமி மெய் மறந்து அவரை தலை குணிந்து வணங்கினாராம்.

Published by
Rohini