Cinema History
உதவி இயக்குனரின் சட்டையை பிடித்து இழுத்த எம்.ஜி.ஆர்! பின்னாளில் வெற்றி இயக்குனராக வலம் வந்த நபர்…
எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மீனவ நண்பன்”. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்து உட்பட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சடையப்ப செட்டியார் என்பவர் தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முதல்வராவதற்கு முன்பு…
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன் பின் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையிலேயே பல திரைப்படங்களில் நடித்தார். அதில் “மீனவ நண்பன்” திரைப்படமும் ஒன்று. எம்.ஜி.ஆர் முதல்வராக ஆவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படம் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”. இத்திரைப்படத்திற்கு முந்தைய திரைப்படம்தான் “மீனவ நண்பன்”.
உதவி இயக்குனரின் சட்டையை பிடித்த எம்.ஜி.ஆர்…
“மீனவ நண்பன்” திரைப்படத்தின் போது ஒரு காட்சிக்கான கேமரா கோணத்தை தயார் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதரின் உதவி இயக்குனரை அழைத்த ஒளிப்பதிவாளர், எம்.ஜி.ஆருக்கு பொசிஷன் கொடுக்க சொன்னார். அதன் படி அந்த உதவி இயக்குனரும் பொசிஷன் கொடுத்தார்.
ஆனால் மேலே இருந்த மின் விளக்கின் சூடு தாங்காமல் அவதிக்குள்ளான அந்த உதவி இயக்குனர், “என்னால் உஷ்ணத்தை தாங்கமுடியவில்லை” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகரப்பார்த்தார்.
அப்போது பின்னால் இருந்து ஒரு கை அவரது சட்டையை பிடித்து இழுத்தது. அது எம்.ஜி.ஆரின் கைதான். அந்த உதவி இயக்குனரை பிடித்து நிறுத்திய எம்.ஜி.ஆர், “ஒழுங்கா நில்லு, நாங்கல்லாம் நிக்கிறோம்ல நீ நில்லு” என கூறி அவரை நிறுத்தி வைத்தராம்.
வெற்றி இயக்குனராக ஆன உதவி இயக்குனர்
அவ்வாறு எம்.ஜி.ஆர் பிடித்து இழுத்த உதவி இயக்குனர்தான் பின்னாளில் “குணா”, “மகாநதி” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய சந்தான பாரதி. இவர் கமல்ஹாசனின் மிக நெருங்கிய நண்பர். மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த பாட்டு அவர்தான் பாடணும்!. இளையராஜா சொல்லியும் கேட்காம காத்திருந்த ஆர்.வி.உதயகுமார்