படப்பிடிப்பில் பெண்டு கழட்டிய சிவாஜி பட இயக்குனர்... எம்.ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?...
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாக இருந்தவர்கள் சிவாஜி மற்றும் எம்ஜிஆர். அவர்களிடம் கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பு தனித்தனியே நடத்துவது மிகப்பெரிய விஷயமாகும். இதில், ஒரே நேரத்தில் ஒரு இயக்குனருக்கு இருவரின் படமும் அமைந்தால் அது சாதாரண விஷயமில்லை. அப்படித்தான் பழம்பெரும் இயக்குனர் கே.சங்கருக்கு இருவரது படங்களும் ஒரே நேரத்தில் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
1962ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் சரோஜாதேவி கதாநாயகியாக உருவான படம் ஆலயமணி. இப்படத்தை சங்கர் காலை முதல் மதியம் வரை இயற்றினார். பின்பு மதியம் முதல் இரவு வரை எம்.ஜி.ஆர் நடிப்பில் சரோஜாதேவி கதாநாயகியாக நடிக்க ‘பணத்தோட்டம்’ படத்தையும் இயக்கினார்.
காலையில் சிவாஜி நடிப்பில் மெய்மறந்து விட்டு மதியம் பணத்தோட்டம் படப்பிடிப்பின் போது எம்ஜிஆரிடம் ஒரு ஷாட் ஓகே செய்ய ஏழு டேக் வாங்கி இருக்கிறார். பின்பு டேக் ஓகே செய்த உடன் எம்.ஜி.ஆர் சங்கரை அழைத்து ‘என்ன சங்கர் இன்னைக்கு காலையில் தம்பி சிவாஜி நடித்த காட்சி எடுத்தீங்களா?’ என்று கேட்க ‘ஆமாம், இன்று சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்று’ சங்கர் சொன்னார்.
உடனே எம்ஜிஆர் சங்கரிடம்” சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர் அவரைப் போன்று நடிப்பை என்னிடம் எதிர்பார்ப்பது நியாயமா? அவர் ஒரு ட்ராக்.. நான் ஒரு ட்ராக்.. ரெண்டும் இணையலாமா? இணையும் கூடாது. என்னிடம் என்ன வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் சங்கருக்கு பொட்டில் அறைந்தது போல் புரிந்தது. ஆலயமணி படத்தில் ‘சட்டி சுட்டதடா’ பாடல் எம்.எஸ்.வி இசையில் மெகா ஹிட் அடித்தது. அதுபோல பணத்தோட்டம் படத்தில் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடலும் மெகா ஹிட் அடித்தது. இவ்விரு தத்துவ பாடல்களுக்கும் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி அவர்களது தனித்தனி பாணியில நடித்திருப்பார்கள். மேலும் இவ்விரண்டு படங்களும் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. எம்ஜிஆர் தன்னை அறிந்ததால் தான் திரைத்துறையில் இவ்வளவு உயரத்திற்கு உயர முடிந்தது. வேரு யாரும் அவர் உயரத்தை தொடமுடியவில்லை.
இதையும் படிங்க: என்னய்யா இவர் மனுஷனா பேயா?.. 72 மணிநேரம் தூங்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கேப்டன்!..