கதாநாயகி கிடைக்காமல் நொந்த தயாரிப்பாளர்!..எம்.ஜி.ஆர் சொன்ன நடிகையின் பெயரை கேட்டதும் அதிர்ச்சியடைந்த சம்பவம்!..
ஒரு காலத்தில் பல படங்களில் நடிகராக நடித்தவர் சின்னப்பத்தேவர். அதுவும் எம்.ஜி.ஆரின் சிபாரிசால் நிறைய படங்கள் இவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஒரு காலத்தில் சொந்தமாக படக் கம்பெனி தயாரிக்கும் முடிவில் இறங்கியிருக்கிறார் தேவர். தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் படக்கம்பெனிக்கு தேவர் ஃபிலிம்ஸ் என்றும் பெயரும் வைத்துவிட்டார். தான் எடுக்கப்போகும் முதல் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தால் நன்றாக இருக்கும் மேலும் நல்ல ஒரு அந்தஸ்தும் கிடைக்கும் என எண்ணிய சின்னப்பத்தேவர் இதை எப்படி எம்.ஜி.ஆரிடம் கேட்பது என தயங்கியே எம்.ஜி.ஆரை பார்க்க சென்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் தேவரின் நிலையை பார்த்ததும் என்ன வேண்டும் என அவராகவே கேட்டாராம். புதியதாக படக்கம்பெனி ஆரம்பித்திருக்கிறேன், நீங்கள் படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என தயங்கி கூறியதை பார்த்த எம்.ஜி.ஆர் கோபத்துடன் இதற்காகதான் வந்தீரா? முதலில் பத்திரிக்கையில் ‘என் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்’ என பதிவிட்டு அல்லவா என்னிடம் வந்து கேட்டிருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நான்தான் கிழவியாக நடிப்பேன்… கமலுடன் மல்லுக்கு நின்ற நாகேஷ்… எந்த படம் தெரியுமா?
இதை கேட்டதும் தேவருக்கு எல்லையில்லா ஆனந்தமாம். படத்திற்கான வேலைகளெல்லாம் போய்க் கொண்டிருந்த நேரத்தில் அந்த நேரத்தில் தான், பத்மினி எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. உடனே பத்மினியையே படத்தின் கதாநாயகியாக போடலாம் என எண்ணி தேவர் பத்மினியை சந்தித்திருக்கிறார்.அவரும் சம்மதம் தெரிவித்து படப்பிடிப்பு கோவையில் என்று சொன்னதும் முடியாது என சொல்லிவிட்டாராம்.
இதை எம்.ஜி.ஆரிடம் கூறி தன் கவலையை தெரிவித்திருக்கிறார் தேவர். உடனே எம்.ஜி.ஆர் ‘ நான் வேண்டுமென்றால் ஒரு நடிகையை கூறுகிறேன், இஷ்டம் என்றால் சொல்’ என கூற இவர் யார் என கேட்டாராம். பானுமதி என சொன்னாராம் எம்.ஜி.ஆர். பானுமதி என்று பெயரை கேட்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம் தேவர். ஏனெனில் பானுமதி ஏகப்பட்ட சந்தேகங்களை கேட்கக்கூடிய நடிகை. கறாரா இருக்க கூடிய நடிகையும் கூட. இதில் தயாரிப்பும் புதியது, இயக்குனரும் புதிது இப்படி இருக்கையில் பானுமதி எப்படி சம்மதிப்பார் என கேட்க நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தேவரை பானுமதியிடம் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். விஷயம் எல்லாம் தெரியவர பானுமதியும் சம்மதம் சொல்ல அதன் பின் உருவான படம் தான் ‘தாயிக்கு பின் தாரம்’ திரைப்படம்.