எம்.ஜி.ஆர் படத்தில் வசனம் எழுத மறுத்த கலைஞர்… கொள்கைல புலியா இருந்திருக்காரே!!

by Arun Prasad |   ( Updated:2023-01-17 09:30:00  )
MGR and Kalaignar
X

MGR and Kalaignar

1954 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மலைக்கள்ளன்”. இத்திரைப்படத்தை ஸ்ரீராமுலு நாயுடு இயக்கியிருந்தார். கலைஞர் மு. கருணாநிதி இத்திரைப்படத்திற்கு வசனம் எழுத, நாமக்கல் கவிஞர் இத்திரைப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார்.

Malaikkallan

Malaikkallan

“மலைக்கள்ளன்” திரைப்படத்திற்கு கதை எழுதிய நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர். ஆதலால் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுத கலைஞர் முதலில் தயக்கம் காட்டினார்.

எனினும் இத்திரைப்படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால்தான் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்கமுடியும் என்ற நிலை வந்தது. அதாவது இத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீராமுலு நாயுடு “கலைஞர் இந்த படத்துக்கு வசனம் எழுதினால்தான் உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுப்பேன்” என எம்.ஜி.ஆரிடம் கூறினாராம்.

Kalaignar M.Karunanidhi

Kalaignar M.Karunanidhi

தனக்கு இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழல் எழுந்த நிலையில், கலைஞரை நேரில் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர். தனக்கு இருக்கும் சிக்கலை கலைஞரிடம் கூறி, “என்னவானாலும் இந்த படத்திற்கு நீங்கள் வசனம் எழுதவேண்டும்” என கோரிக்கை வைத்தாராம். அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் மிக நெருங்கிய நண்பர் என்பதால் கலைஞர் “மலைக்கள்ளன்” திரைப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக்கொண்டார்.

எனினும் இத்திரைப்படத்தில் கலைஞர் பணியாற்றியபோது அவருக்கும் இயக்குனர் ஸ்ரீராமுலுவுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் எழுந்தன. ஆதலால் இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்தபோது, “இந்த படத்தின் டைட்டிலில் எனது பெயரை போடவேண்டாம்” என கலைஞர் கூறிவிட்டாராம்.

MGR and Kalaignar

MGR and Kalaignar

கலைஞரின் வசனங்களுக்கு அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் கலைஞர் தன்னுடைய பெயரை டைட்டிலில் போடவேண்டாம் என்று கூறியது இயக்குனரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் பின் மீண்டும் எம்.ஜி.ஆர் கலைஞரை நேரில் சென்று சந்தித்து அவரை சமாதானப்படுத்தி இயக்குனரிடம் அழைத்து வந்திருக்கிறார். அதன் பிறகுதான் கலைஞர் தன்னுடைய பெயரை டைட்டிலில் பயன்படுத்த அனுமதி தந்தாராம்.

Next Story