தப்புக் கணக்கு போட்ட எம்ஜிஆர்! எண்ணியதை வருந்தி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம்
தமிழ் சினிமாவில் ஒரு கோலோச்சிய நடிகராக திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவர் மக்களின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்தார். படத்தில் மட்டும் தன் ஹீரோத்தனத்தை காட்டாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே வாழ்ந்தவர். சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல பேருக்கு ஒரு தலைவனாக திகழ்ந்தவர். பல நடிகர்கள் இயக்குனர்கள் எம்ஜிஆருக்கு ரசிகர்களாக இன்னமும் இருந்து வருகின்றனர்.
கலையுலக வாரிசு
அந்த வகையில் பாக்கியராஜ் தன்னுடைய கலை உலக வாரிசு என்று நேரடியாகவே எம்ஜிஆர் கூறியிருந்தார். அதேபோல எம்ஜிஆர் மீது அதீத அன்பு கொண்டவர் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். பாண்டியராஜனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னி ராசி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் பாண்டியராஜன் .அதுவும் இயக்குனராக தன்னுடைய முதல் காலடியை எடுத்து வைத்தார். பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து அதன் பிறகு இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இன்று வரை செவ்வாய் தோஷம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு ஏராளமானோர் மூடநம்பிக்கையில் தத்தளித்துக் கொண்டு வருகின்றனர்.
அதை முற்றிலும் களைத்தவர் பாண்டியராஜன். கன்னி ராசி என்ற படத்தில் அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் செய்தவர். அதன் பிறகு தன்னுடைய இரண்டாம் படமான ஆண்பாவம் படத்தை இயக்கினார். அதில் நடிக்கவும் செய்தார். தன்னுடைய முதல் நடிப்பை ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாண்டியராஜன்.
படம் பார்க்க வந்த எம்ஜிஆர்
அந்தப் படத்தின் முதல் பிரிவியூவை எம்ஜிஆர் பார்க்க வேண்டும் என பாண்டியராஜன் விரும்பினார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்ததனால் மிகவும் பிசியாக இருந்தார். மேலும் பாண்டியராஜன் உடல் தோற்றம் இவையெல்லாம் வைத்துக்கொண்டு எம்ஜிஆர் கொஞ்சம் தயங்கியதாகவும் இந்த தகவலை கூறிய செய்யாறு பாலு தெரிவித்தார்.
ஏனெனில் பாண்டியராஜன் அப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் சின்ன பையன் மாதிரி ஒரு வித தோற்றத்துடன் இருப்பார். அதனால் இந்த படத்தை பார்க்க போய் எங்கே நம் நேரம் வீணாகி விடுமோ என்று எம்ஜிஆர் அஞ்சியதாகவும் செய்யாறு பாலு கூறினார். அதன் பிறகு ஆர் எம் வீரப்பன் சில கண்டிஷங்களை முன் வைத்தாராம் அதாவது இந்த திரையரங்கில் தான் பிரிவுவை வைக்க வேண்டும் எனவும் இந்த சீட்டு தான் எம்ஜிஆர் இருக்கு இருக்க வேண்டும் எனவும் ஒரு வேலை படம் பிடிக்கவில்லை என்றால் சொல்லாமல் எம்ஜிஆர் சென்று விடுவார் அதைப் பற்றி நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது எனவும் கண்டிஷன்களை போட்டு எம்ஜிஆர் படம் பார்க்க வந்தாராம்.
விழுந்து விழுந்து சிரித்த எம்ஜிஆர்
ஆனால் அந்தப் படத்தின் முதல் பாடலான "வந்தனம் வந்தனம்" என்ற பாடலை கேட்டதுமே எம்ஜிஆர் உற்சாகமாகி விட்டாராம். அது மட்டும் இல்லாமல் முதல் பாதி வரைக்கும் மிகவும் சிரித்துக்கொண்டே படத்தை பார்த்தாராம் எம்ஜிஆர். படம் முடிந்ததும் பாண்டியராஜனை அழைத்து "ஒருவனின் உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது என்று சொல்லுவார்கள் .நான் அந்த தவறை செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று பாண்டியராஜனிடம் எம்ஜிஆர் கேட்டாராம் .இதை கேட்டதும் உடனே பாண்டியராஜன் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து விட்டாராம்.
இதையும் படிங்க : தனுஷ் 50 படத்தின் கதை, நடிகர்கள் குறித்த புது அப்டேட்.. சுவராஸ்யமா இருக்கே!..
அதன் பிறகு பாண்டியராஜனின் திருமணத்திற்கும் எம்ஜிஆர் சென்றாராம் .அப்போது பாண்டியராஜன் கோட் சூட் அணிந்து டை கட்டிக்கொண்டு நிற்க எம்ஜிஆர் மேடைக்கு வந்ததும் நேராக பாண்டியராஜனின் டையை சரி செய்தாராம். இப்படி ஒரு நெருக்கம் பாண்டியராஜனுக்கும் எம்ஜிஆர் இருக்கும் அதன் பிறகு உருவானது என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.