52 டியூனை ரிஜெக்ட் செய்த எம்.ஜி.ஆர்... அப்படி உருவான பாடல் எது தெரியுமா?....

by சிவா |   ( Updated:2023-01-07 10:11:59  )
mgr
X

mgr

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். இவர் எப்போது மாஸ் ஹீரோவாக மாறினாரோ அப்போதே இவர் நடிக்கும் படம் தொடர்பான எல்லா விஷயத்திலும் தலையிட்டார். இப்போதுள்ள நடிகர்கள் இதைசெய்து வந்தாலும் இதற்கு முன்னோடி எம்.ஜி.ஆர்.தான்.

தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர் என ஒரு படத்திற்கு தேவையான முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை எம்.ஜி.ஆர்தான் தேர்ந்தெடுத்தார். அவர் சம்மதம் தெரிவிக்காமல் ஒன்றும் நடக்காது. அவர் ஒரு காட்சியை மாற்ற சொன்னால் இயக்குனர் மாற்றித்தான் ஆக வேண்டும்.

mgr

இதுஒரு புறம் எனில், இசை ஞானமும் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடிக்கும் படங்களுக்கான அனைத்து பாடல்களுக்கான மெட்டையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் பாடல்கள் இப்போதும் சாகாவரமாக இருக்கிறது. இசையமைப்பாளர் பல மெட்டுக்களை போட்டாலும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்பட்டால்தான் அது ஓகே ஆகும். இல்லையேல், பல மெட்டுக்களை இசையமைப்பாளர் போட்டு அவருக்கு காண்பிக்க வேண்டும்.

mgr

mgr

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அடிமைப்பெண். இப்படத்தின் கதையை அடிப்படையாக வைத்தே பாகுபலி படமே உருவாக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் ‘தாயில்லாமல் நானில்லை’. இப்படத்திற்கு இசையமைத்த கேவி மகாதேவன் மொத்தம் 52 டியூன்களை போட்டு காட்டினாராம். ஆனால், அது எதுவும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. மகாதேவன் 53வதாக போட்ட டியூனைத்தான் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்தார். அதுதான் ‘தாயில்லாமல் நானில்லை’ பாடல். இப்போதும் இப்பாடல் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்றால் எம்.ஜி.ஆரின் இசை ஞானத்திற்கு இது ஒரு சாட்சியாகும்.

இதையும் படிங்க: “நீங்கதானே என்னைய கலாய்ச்சது??”… ரஜினியிடம் வசமாக சிக்கிய லவ் டூடே இயக்குனர்… மாட்டிக்கிட்டீங்களே ப்ரோ!!

Next Story