எம்ஜிஆர் சொல்லி அந்த பழக்கத்தை விட்டேன்! தியாகராஜனின் தெரியாத மறுபக்கம்

by Rohini |   ( Updated:2024-04-26 11:38:19  )
thiyaga
X

thiyaga

MGR Thiyagarajan: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக விநியோகஸ்தராக என பன்முக திறமை கொண்டவராக இருந்தவர் நடிகர் தியாகராஜன். டாப் ஸ்டார் பிரசாந்தின் அப்பாவும் இந்த தியாகராஜன் தான். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தியாகராஜன் ஒரு பெரிய பிசினஸ்மேனாக இருந்திருக்கிறார்.

அதுவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பல திரைப்படங்களை விநியோகம் செய்தும் தன் பணியை கவனித்திருக்கிறார். இவர் முதன் முதலில் நடித்த படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்த படத்தின் மூலம்தான் நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு அலைகள் ஓய்வதில்லை படத்தை தயாரிக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தாராம்.

இதையும் படிங்க: விஜயால கண்ட கனவு எல்லாம் நாசமா போச்சே! கடுப்பில் விஷால்.. எங்க வந்து நிக்குது பாருங்க?

ஆனால் இளையராஜாவின் அண்ணன் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் இளையராஜா தியாகராஜனிடம் வந்து இந்த படத்தை தன் அண்ணனுக்காக விட்டுக் கொடுக்கும்படி கேட்டதாகவும் அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை படத்தை இளையராஜாவின் அண்ணனுக்கு விட்டுக் கொடுத்ததாகவும் ஒரு பேட்டியில் தியாகராஜன் கூறினார்.

அதனால் பாரதிராஜா இருக்கிற வாய்ப்பையும் தொலைத்து விட்டாய். அதனால் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நீ நடி என்று சொன்னதின் பேரில் தான் தியாகராஜன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவு இந்த படம் சில்வர் ஜூப்ளி வெற்றி அடைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தியாகராஜன் பள்ளி படிப்பில் இருக்கும் போதே பாக்ஸராக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: கமலிடம் மாட்டிக்கொண்டு முழித்த ஹரி!.. ஜஸ்ட் மிஸ்!.. நல்லவேளை உண்மைய சொல்லிட்டாரு!..

இது பல பேருக்கு தெரியாதாம். அதனால் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு இவருடைய பாக்ஸர் குரூப்பில் இருந்த சில பேர் மீண்டும் ஒரு பெரிய ஸ்டேஜில் நீ பாக்ஸிங் செய்ய வேண்டும் என தியாகராஜனிடம் சொல்லி அவருடைய போட்டோவை வைத்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

இதை ஒரு சமயம் எம்ஜிஆர் பார்த்துக் கொண்டாராம். அலைகள் ஓய்வதில்லை படத்தின் சில்வர் ஜூப்ளி விழாவிற்கு வருகை தந்த எம்ஜிஆர் தியாகராஜனிடம் நீ பாக்சர் என எனக்கு தெரியும். நடிக்க வந்த பிறகு பாக்ஸிங் தொழிலை விட்டு விடு. ஏனெனில் பாக்ஸிங் செய்யும் போது உனக்கு எங்கேயாவது அடி பட்டுவிட்டால் உன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் இதனால் நஷ்டம் அடைவார்கள். இது என்னுடைய வேண்டுகோள் அல்ல கட்டளை என கூறினாராம். அதிலிருந்து பாக்ஸிங் தொழிலை விட்டு விட்டாராம் தியாகராஜன்.

இதையும் படிங்க: அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த தப்பு… ஓபனாக ஒப்புக்கொண்ட இயக்குனர் தரணி!…

Next Story