நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அதற்கான காரணம் இதுதான்!.. ஒரு ஆச்சர்ய தகவல்...

MGR: சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். நடிகர் சிவாஜியும் அப்படித்தான். ஆனால், அவரை போல முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு அமையவில்லை. 1937ம் வருடம் வெளிவந்த சதிலீலாவதி படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமானார்.

அதன்பின் கிட்டத்தட்ட 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு 1947ம் வருடம் வெளிவந்த ராஜகுமாரி படத்தில்தான் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகவும், ஆளுமையாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார்.

இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது எம்.கே.தியாகராஜ பகவதார், டி.ஆர். மகாலிங்கம், எம்.கே.ராதா, ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி என பல நடிகர்களும் நடித்து வந்தனர். எனவே, அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்தான் எம்.ஜி.ஆர்.

ஒருமுறை தியாகராஜ பகவாதர் ஹீரோவாக நடித்த அசோக்குமார் என்கிற படத்தில் மன்னனின் உத்தரவுபடி பகவாதரின் கண்களை கம்பியால் குத்தி எம்.ஜி.ஆர் குருடாக்குவது போல் காட்சி. ஆனால், அருகில் சென்ற எம்.ஜி.ஆர் அப்படி நடிக்க முடியாமல் கண்கலங்கி நின்றார். என்னால் அப்படி நடிக்க முடியாது எனவும் சொல்லிவிட்டார். அதன்பின் பகவாதரே அந்த கம்பியை பிடிங்க தனது கண்ணில் குத்தி கொள்வது போல காட்சியை மாற்றி எடுத்தனர்.

இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

இதுதான் சீனியர் நடிர்களுக்கு எம்.ஜி.ஆர் எப்படி மரியாதை கொடுப்பார் என்பதற்கு பெரிய உதாரணம். எம்.கே.ராதா என்றொரு நடிகர் இருந்தார். எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமான சதிலீலாவதி படத்தின் ஹீரோ அவர். பல திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். பெரும்புகழ் பெற்ற சந்திரலேகா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

mgr

பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோ ஆனபின்னரும் எம்.கே.ராதாவை ‘அண்ணன்’ என எல்லா அழைத்து மரியாதை கொடுத்துவந்தார். ஒருமுறை ஒரு பொது மேடையில் எம்.கே.ராதாவின் காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் காலில் விழுந்து வணங்கிய நபர்கள் மிகவும் குறைவு. அதில் ஒருவர் எம்.கே.ராதா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்காக படத்தில் பாடலை தள்ளி வைத்த எம்.ஜி.ஆர்!.. அட இப்படியும் ஒரு நடிகரா?!…

 

Related Articles

Next Story