எம்ஜிஆர் மட்டும் இந்த படத்தில் நடிச்சிருந்தா?.. தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு!.. அப்படி என்ன விஷயம்?..
தமிழ் சினிமாவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடைமொழி இருக்கும். அது அவர்கள் நடித்த படங்களின் மூலமாகவோ அல்லது மக்களால் அவர்களுக்கு கிடைத்த பெயர்கள் மூலமாகவோ வந்திருக்கலாம். மேலும் முதல் படம் வெற்றி அடைந்தாலும் அதன் மூலமாகவும் ஏதோ ஒரு வித அடைமொழியுடன் காலங்காலமாக மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பர்.
அப்படி சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். வெண்ணிறாடை நிர்மலா, வெண்ணிறாடை மூர்த்தி, வியட்னாம் வீடு சுந்தரம் என எண்ணற்ற திரைப்பிரபலங்கள் இருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மேஜர் சுந்தராஜன். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே இவரை சொல்லலாம்.
இதையும் படிங்க : த்ரிஷாவை காரணம் காட்டி சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா… என்னவா இருக்கும்??
குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு இவரை மிஞ்சிய நடிகர் இதுவரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. கம்பீரமான குரல், கம்பீர தோற்றம் , அழகான ஆங்கில உச்சரிப்பு என வசீகரமான நடிப்பால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தவர் மேஜர் சுந்தராஜன். ஆரம்பகாலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் மேஜர். மேலும் சிவாஜியின் தீவிர ரசிகராகவும் இருந்தார்.
ரசிகராக இருந்தவர் பின்னாளில் இவர் ஏற்று நடிக்காத சிவாஜி படங்களே இல்லை என்ற அளவுக்கு சிவாஜியும் மேஜரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். இவருக்கு இவர் பெயரில் முன்னாள் மேஜர் என்ற பெயர் வரக்காரணமே மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்ததன் மூலமாகத்தான். முதலில் அந்த படத்தை நாடகமாக தான் அரங்கேற்றியிருந்தார் கே.பாலசந்தர்.
இதையும் படிங்க : “இந்த படத்தை எடுத்ததுக்கு ரொம்ப ஃபீல் பண்ணேன்”… ஓப்பனாக பேசிய மிஷ்கின்… அடப்பாவமே!!
அந்த நாடகத்தில் குருடனாக மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரத்தில் சுந்தராஜன் அருமையாக நடித்திருப்பார். அந்த நாடகத்தை பார்த்து இயக்குனர் ராமண்ணாவிற்கு பிடித்துப் போக இந்த கதையில் எம்ஜிஆர் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி எம்ஜிஆரை வரவழைத்து இந்த நாடகத்தை பார்க்க வைத்திருக்கிறார். எம்ஜிஆரும் நாடகத்தை பார்த்து சுந்தராஜனையும் கே.பாலசந்தரையும் மனதாரப் பாராட்டினாராம்.
ஆனால் இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது என ராமண்ணாவிடம் கூறியிருக்கிறார் எம்ஜிஆர். இந்தக் கதையில் பெண் கதாபாத்திரம் இல்லை என்ற காரணத்தினால் தான் எம்ஜிஆர் முடியாது என சொல்கிறார் என நினைத்து வேண்டுமென்றால் பெண் கதாபாத்திரம் வைத்து கதையில் சிறு மாற்றத்தை பண்ணிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் எம்ஜிஆர் அதற்காக இல்லை, என்னை குருடனாக காட்டினால் கண்டிப்பாக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அதுமட்டுமில்லாமல் பல திரையரங்குகள் தீக்கு இரையாகிவிடும், அதனாலேயே முடியாது என கூறி மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் கே.பாலசந்தரே இந்த நாடகத்தை படமாக எடுக்க நாடகத்தில் நடித்த சுந்தராஜனே படத்தில் மேஜராகவும் நடித்து பெரும் புகழ் பெற்றார் என்பது பின்னாளில் நடந்த கதை.