எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் படப்பிடிப்பை விட்டு வெளியேறிய அந்த முக்கிய இயக்குனர்… என்னவா இருக்கும்??
எம்.ஜி.ஆரை வைத்து கிட்டத்தட்ட 17 திரைப்படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். அந்த அளவுக்கு இருவருக்குமிடையே மிக நெருங்கிய உறவு இருந்தது. எனினும் சில உறவுகள் மோதலில் தொடங்குவதும் உண்டு. எம்.ஜி.ஆர், ப.நீலகண்டன் ஆகியோரின் உறவும் அவ்வாறு பல மோதல்களுக்கு பிறகுதான் தொடங்கியது.
ப.நீலகண்டனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொடக்கத்தில் அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் ஏற்படுமாம். இப்படித்தான் ஒருமுறை படப்பிடிப்பின்போது ஒரு நாள் அன்று எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்கான எல்லா ஏற்பாட்டையும் தயார் செய்திருந்தார் ப.நீலகண்டன். அப்போது ஒரு பத்து மணிவாக்கில் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த எம்.ஜி.ஆர் அப்போது எடுக்கப்பட இருந்த காட்சிக்காக தயார் நிலையில் இருந்த கேமரா கோணத்தை பார்த்திருக்கிறார்.
உடனே ப.நீலகண்டனிடம் சென்று “இந்த காட்சிக்கு கேமராவை மேலே வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும். மாற்றிவிடுங்கள்” என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாராம். எம்.ஜி.ஆர் இப்படி கூறியவுடன் ப.நீலகண்டனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம்.
“காரை எடுத்துட்டு வரச்சொல்லுங்க, நான் வீட்டுக்குப்போறேன். எனக்கு படமும் வேணாம் ஒன்னும் வேணாம். நான் ஊர்ல மாட்டுவண்டி ஓட்டியாவது பிழைச்சிக்குவேன்” என பயங்கரமாக சத்தம் போட்டுக்கொண்டே தனது டிரைவரை தேடினாராம். ஆனால் டிரைவர் அங்கே இல்லையாம்.
அப்போது அவரது உதவியாளரான மா.லட்சுமணன், அவரிடம் வந்து “எதற்கு இவ்வளவு ஆத்திரப்படுறீங்க? எம்.ஜி.ஆருக்கு எந்தளவு செல்வாக்கு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? அவருடைய கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் எல்லாரும் வரிசைல நிக்கிறாங்க.
இதையும் படிங்க: டான் பட இயக்குனர் செய்த காரியத்தால் கைவிட்டுப்போன ரஜினி பட வாய்ப்பு… என்னவா இருக்கும்??
அப்படிப்பட்ட ஒரு நடிகர் உங்களை ஒரு ஷாட் மாத்தி வைக்கச்சொன்னா மாத்திவைக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை. அதை விட்டுட்டு அவரோட சண்டை போட்டுட்டு நீங்க பாட்டுக்கு கோச்சிட்டு போய்டீங்கன்னா, எப்படி? உங்களுக்கு குழந்தைங்க இருக்கு, அதுங்களை எல்லாம் படிக்க வைக்கனும். இதெல்லாம் மனசுல வச்சிக்கோங்க” என அட்வைஸ் செய்தாராம்.
தனது உதவியாளர் இவ்வாறு அறிவுரை கூறிய பிறகுதான் ப.நீலகண்டன், தனது உதவியாளர் சொல்வதுதான் சரியானது என்பதை உணர்ந்தாராம். அதன் பின் எம்.ஜி.ஆர் சொன்னபடி அந்த காட்சியில் ஷாட்டை மாற்றி படமாக்கினாராம். இத்தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.