ரசிகர்களுக்காக படத்தில் பாடலை தள்ளி வைத்த எம்.ஜி.ஆர்!.. அட இப்படியும் ஒரு நடிகரா?!…

0
708
mgr

mgr vivasayi: திரையுலகில் பல நடிகர்கள் இருந்தாலும் அதிகமான ரசிகர்களை கொண்டிருந்தவர் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே. ஏனெனில், அவரை பிடிக்காதவர்கள் மிகவும் சொற்பமானவர்கள்தான். அழகு, நடிப்பு, வசீகரம் என பார்த்ததும் சுண்டி இழுக்கும் தோற்றத்தை உடையவர் அவர்.

எம்.ஜி.ஆர் படம் என்றாலே சண்டை காட்சிகள் அசத்தலாக இருக்கும். வாள் சண்டை, கத்தி சண்டை, மல்யுத்தம் என எல்லாவற்றையும் முறையாக பயின்றவர் எம்.ஜி.ஆர். அவர் சண்டை போடும் ஸ்டைலை பார்த்துதான் அவருக்கு ரசிகர்கள் பலரும் உருவானார்கள். அப்படி உருவான ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் அவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியது.

இதையும் படிங்க: ஒத்தைக்கு ஒத்தை மோதி பாக்கலாமா?!.. சவால் விட்ட நடிகர் திலகம்.. எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி…

தனது ரசிகர்களை மிகவும் மதிப்பவர் எம்.ஜி.ஆர், ரசிகர்களின் விருப்பத்தை தெரிந்து நடந்து கொள்வார். எங்கு சென்றாலும் அவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவத்தையும் கொடுப்பார். தன்னிடம் தனது ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்பதில் எம்.ஜி.ஆர் தெளிவாக இருந்தார். அதனால்தான் ரசிகர்களுக்கு பிடிப்பது போல் படங்களில் அவரால் நடிக்க முடிந்தது.

தன்னை பார்த்து தனது ரசிகன் கெட்டு போய்விடக்கூடாது என்பதற்காக சினிமாவில் கூட சிகரெட் மற்றும் மது அருந்துவது போன்ற காட்சியில் நடிக்கவே மட்டார். கடைசிவரை எம்.ஜி.ஆர் அதில் உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர் தனது ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுப்பார் என்பதை ஒரு சம்பவம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலரும் நடித்து 1967ம் வருடம் வெளியான திரைப்படம் விவசாயி. இந்த படத்தில் ‘விவசாயி.. விவசாயி.. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ என்கிற ஒரு பாடல் வரும். இந்த பாடலை மருதகாசி மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டு போன சந்திரபாபு!. பங்கமாக கலாய்த்த எம்.ஜி.ஆர்!. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்டு!..

டி.எம்.எஸ்.பாடிய இந்த பாடலை படத்தின் டைட்டில் கார்டு வரும்போது போடலாம் என தேவர் நினைத்தார். ஆனால், எனது ரசிகர்கள் எல்லாம் தொழிலாளிகள். வேலையை முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாகத்தான் தியேட்டருக்கு வருவார்கள். அவர்கள் வருவதற்குள் இந்த பாடல் முடிந்துவிட்டால் ஏமாந்து போவார்கள். எனவே, படம் துவங்கி 5 நிமிடம் கழித்து பாடலை வையுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்ல அப்படியே இந்த பாடல் இடம் பெற்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதும் 55 வருடங்கள் கழித்தும் பல கிராமங்களில் இருக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பது இப்போதும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: திடீரென இறந்துபோன இயக்குனர்.. அவரின் குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் செய்த பேருதவி…

google news